உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(268) || –

அப்பாத்துரையம் – 40

ளாகவே அவன் மதுரையில் போதிய பொருள் திரட்டினான். அதுமட்டுமின்றி, அவன் ஆவலுடன் தன் ஊருக்கு மீண்டு வந்தான். ஆனால், புறப்படும் சமயம் ஏற்பட்ட ஒரு சிறு நிகழ்ச்சி, ஊரில் அவனுக்கு எதிர்பாராத் தடங்கலை உண்டாக்கக் காரணமாக இருந்தது. இது அவன் அறியாத, அறியமுடியாத மாயமாய் அமைந்தது.

நண்பன் மும்முடியுடன் கோமாறன் தங்கிப் பேசிய மரத்தில் ஒரு குறளி குடியிருந்தது. மாலை நேரமானதால் அது விழித்துக்கொண்டது. நண்பர் பேச்சு முழுவதையும் அது கேட்டுக்கொண்டு இருந்தது. கோமாறனைப் பற்றிய பல செய்திகள் அதற்குத் தெரிய வந்தன. அதன் பயனாக அதன் குறும்புள்ளத்தில் ஒரு நைப்பாசை உருக்கொண்டது. கோமாறன் குடும்பவாழ்வில் ஒரு குழப்பம் உண்டுபண்ணி, வேடிக்கை பார்க்க அது திட்டமிட்டது. சமயமும் சூழ் நிலையும் இதற்கு நல்ல வாய்ப்பளித்தன.

நண்பர்கள் பிரிந்து வேறுவேறு திசையில் சென்றதும். குறளி மும்முடியைப் பின்பற்றிச் சென்றது. குறளியின் மெய் யுருவம் ஆவியுருவமானதால், மும்முடி அதைக் கவனிக்க முடியவில்லை. மும்முடியின் வீட்டையும் ஆட்களையும் குறளி நன்கு அடையாளம் கண்டறிந்தபின் மீண்டும் இலுப்பை மரத்துக்கே வந்தது. ஆனால் மறுநாள் விடியுமுன் அதன் திட்டம் ஒரு பெரிய திருவிளையாட்டாயிற்று. அது கோமாறன் உருவிலே திரும்பவும் ஊருக்குள் வந்தது. மும்முடியின் வீட்டுக்கும் அது சென்றது.

கோமாறன் உருவில் வந்தது குறளிமாறனே என்பது மும்முடிக்குத் தெரியாது. ஆகவே, வெளியூர் செல்ல விடைபெற்ற கோமாறன் திரும்பி வந்தது கண்டு அவன் வியப்படைந்தான். ஆனால், இவ்வகையில் குறளிமாறன் அவனுக்குப் பொருத்தமான விளக்கம் தந்தான்.

'இளமனைவியைவிட்டு இப்போதே செல்வானேன், சில நாள் சென்று செல்லலாமே!"என்று மும்முடி கோமாற னிடம் வாதாடியிருந்தான். குறளிமாறன் அதை இப்போது எடுத்துச் சுட்டிக் காட்டினான்.