உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

II.

அப்பாத்துரையம் - 41

வாழ்க்கையிலும் அறிவு வளர்ச்சி பலதரப்பட்டதாகத் தோன்றினாலும், இயக்கையில் அது ஒரு தொகுதியுட்பட்டதே.

கல்வித்திட்டத்தில் பாடம் வகுப்பு ஆகிய முறைகள் உண்டு. அதுபோல வாழ்க்கைமுறை வகுப்பிலும் பல படிமுறைகள் இருக்கலாம். ஆனால் அந்தப்படிகள் ஒரே முடிந்த அறிவுக்கு வழிவகுப்பவையாக மட்டுமே இருக்க முடியும்.

சில

ஒரு குறிப்பிட்ட அளவு அறிவை ஒருவன் விரைவில் பெறலாம். மற்றொருவன் கால நீட்டித்தோ, பிற்பட்டோ, அல்லது சுற்றுவழியாகவோ பெறக்கூடும். ஒருவன் ஒரு அனுபவங்களை ஊன்றிக் கவனித்து அவற்றின் படிப்பினை களாலேயே அவ்வறிவைப் பெறலாம். மற்றொருவன் மிகப்பல அனுபவங்கள் கடந்தே அதைப் பெறக்கூடும். இவ்வேறுபாடுகள் அவரவர் அகத்திறனை அல்லது முன்னை அனுபவங்களின் நல் விளைவைப் பொறுத்தவை. எனினும் அனுபவங்களின் வ்வேறுபாட்டாலோ அறிபவர் வேறுபட்டாலோ அறிவு வேறுபடுவதில்லை.

இயற்கை இவ்வடிப்படை அறிவில் வகுத்துள்ள படிமுறைகளின் வழியாகவே எல்லா மனிதரும் சென் று வளர்ச்சியடையவேண்டும். அவையே நாகரிகப்படிகள், பண்பின் திறங்கள் அறிவின் அளவைகள் ஆகும்.

66

கல்விநிலையத்தின்

அறிவுத்திட்டத்தை

மாணவர்

பின்பற்றமுடியுமே தவிர, அதன் முழு அளவைக் காணமுடியாது. முழு அளவைப்பெற்றவர் தாம் அதை அறியவும் தீட்டவும் இயக்கவும் முடியும். ஆயினும் அத்தகைய முழுநிறை திட்டத்தையே 'கல்வி” “அறிவு" என்ற பொதுச் சொற்களால் அவர்கள் சுட்டுகின்றனர். இதுபோலவே வாழ்க்கையின் முழுநிறை அறிவு அமைதியை வாழ்க்கையின் மாணவராகிய மனிதர் முழுவதாகப் பார்க்க முடியாது. எனினும் பொதுமுறையில் தொகைச்சுட்டாக அதனையே அவர்கள் “தெய்வநீதி" அல்லது “பொதுநேர்மை" என்று குறிப்பிடுகின்றனர். அதை நோக்கியே நல்மனிதர் அதாவது முற்போக்குடையவர்கள் நேர்வழியாக முனைகின்றனர். மற்றையோர் சுற்று வழியாகச் சென்று அலமருகின்றனர், அல்லது பின்னோக்கி நழுவி அவதியுறுகின்றனர்.