உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மக்களும் அமைப்புகளும்

தெய்வநீதி : காரணகாரியத் தொடர்பு

91

தனி நீதிக்கும் தெய்வ நீதிக்கும் உள்ள வேறுபாடு என்ன? தனி நீதி தனி மனிதன் விருப்புவெறுப்புக்களையும், அவன் தற்காலிக இன்பதுன்ப உணர்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டது. தெய்வ நீதியோ அவற்றுக்கு அப்பாற்பட்டது. அது எல்லா மனிதருக்கும், எல்லாக் காலத்துக்கும், எல்லா இடத்துக்கும் பொருத்தமானது. ஏனெனில் அது காரணகாரியத் தொடர்பை அடிப்படையாகக் கொண்டது. இன்றியமையா இணைப்பால், எல்லாப் பொருள்களும் எல்லா நிகழ்ச்சிகளும் ஒரே முழுநிறை அமைதியின் பல்வேறுபட்ட உறுப்புக்களாகின்றன.

அதன்

காரணகாரியத் தொடர்பு மூவகை அமைதிகளை

உடையது.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. அஃதாவது எல்லாச் செயல்களும் காரணங்களே. அதே சமயம் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. அஃதாவது எல்லாச் செயல்களும் காரணங்களே. எனவே செயல்கள் ஒன்றுகொன்று காரண காரியமாகச் சங்கிலியின் சங்கிலியின் கண்ணிகள் போலத் தொடர்கின்றன.

குறிப்பிட்ட ஒரு காரணம் அதற்குரிய காரியமாகிய செயலை உண்டுபண்ணியே தீரும். அதே சமயம் ஒரு காரணம் அதற்குரிய குறிப்பிட்ட விளைவான காரியத்தையன்றி வேறு எதையும் உண்டுபண்ணாது. அஃதாவது ஒரே காரணம் எப்போதும் ஒரே காரியத்துக்கு உரியது.

குறிப்பிட்ட ஒரு காரியம் அதற்குரிய காரணத்தையே தொடரும். வேறு காரணத்தால் தொடராது. ஒரே காரியம் எப்போதும் ஒரே காரணத்துக்கு உரியது. அதனைப்பற்றி வேறு காரியம் தொடராது.

காரணகாரியத் தொடர்பின் மேற்குறிப்பிட்ட மூன்று கூறுகளுமே வாழ்கையிலும் இயற்கையிலும் கணக்கியலின் சரிநுட்பநிலை, இன்றியமையாக் கட்டாய உறுதிப்பாடு ஆகியவற்றை உண்டுபண்ணுகின்றன. காரணகாரியத் தொடர்பு எல்லாப் பொருளைகளையும் பண்புகளையும் செயல்களையும்