உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

அப்பாத்துரையம் - 41

ஒரே ரே பேரமைதியில் இடம் பெறும்படி இணைக்கிறது. இது பற்றியே எல்லா அறிவுத்துறைகளுக்கும் கலை, நாகரிகம் ஆகியவற்றுக்கும் அடிப்படை அறிவமைதியே என்று நாம் கூறுகிறோம். இதனையே நாம் தெய்வநீதி என்றும் வழங்குகிறோம். ஏனெனில் இது என்றும் மாறுபடாதது.என்றும் கூடாதது; குறையாதது, ஒழியாதது, அழியாதது! முன்னாகவோ பின்னாகவோ, மனித இனம் அதைச்சென்று அடைந்தே யாகவேண்டும்!

தெய்வ நீதியை ஆன்மிகத்துறைக் கணக்கியல் நெறி என்று கூறலாம். கணக்குத் தெரியாதவனும் கணக்கில் தவறுபவனும் அதன் தண்டனையிலிருந்து விலகிவிட முடியாது. அதுபோலடத தெய்வநீதியை ஒருவன் அறியாவிட்டாலும், தவறாகப் புரிந்துகொண்டு செயலற்றினாலும், அதன் இன்றியமையா விளைவுகளுக்கு ஆளாகியே தீரவேண்டும். காரியமாகிய அவ்விளைவுகளை விலக்குவதற்கு அல்லது உண்டுபண்ணுவதற்கு ஒரே வழி காரணத்தை அறிந்து அதை விலக்குவதோ, மேற்கொள்ளுவதோதான். எனவே தெய்வநீதியின் படிகளாகிய கார்யகாரணத் தொடர்பறிந்தால் ஒருவன் விலக்கவேண்டிய விளைவுகளை விலக்கவும், மேற்கொள்ள வேண்டியவற்றை வருவிக்கவும் கூடும். அவன் தன் ஊழைத் தானே ஆக்குகிறான்.

உலக வாழ்விலுள்ள உயர்வு தாழ்வுகள் சரிநுட்பமாக இன்றியமை யாமையாது செயலாற்றும் தெய்வநீதியின் விளைவுகளேயாகும். அதன்வழி இயங்கும் ஆன்மிக அமைதிகள் கட்டாயமாகச் செயலாற்றுபவை யாதலால், அவற்றை எவரும் விலக்க இயலாது. ஆனால் காரணகாரிய அறிவுடையவன் அந் நீதியை உணர்ந்து, இதன் போக்கை வேண்டும்போது வேண்டிய வகையில் மேற்கொண்டும் விலக்கியும் ஆட்கொள்கிறான்.

தெய்வநீதி தற்செயலானதுமல்ல; நிலையற்ற போக்குடையதுமல்ல: கட்டாயமான நேர்விளைவுடையது. இந்தத் தத்துவத்தின் மீதுள்ள உறுதியான நம்பிக்கையே உண்மை அறிவின் முதற்படியாகும். அவ்வுறுதி இல்லையென்றால் காரியகாரணத் தொடர் விளங்காது. தெய்வநீதி ஒன்றே என்ற நம்பிக்கை அறிவின் இரண்டாம் படியாகும். அது

ல்லையென்றால் வாய்மையல்லாதவற்றை விலக்கி ஒரே