உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மக்களும் அமைப்புகளும்

93

வாய்மையைப் பொறுமையுடன் நாடவொ, நாடிப்பெற்றவன் அதில் ஊன்றி நின்று அடுத்தபடிக்கு முன்னேறவோ இயலாது. அறிவின் மூன்றாவது படி தெய்வ அருள்பற்றிய உறுதி. இது ல்லாவிட்டால், தீமையின் முடிவும் நன்மையாகும் என்ற நல்லெண்ணமும், நன்முயற்சியும் விடாப்பிடியும் உண்டாக மாட்டா. தீமையீயனால் ஏற்படும் மனக்கசப்பே தீமையை விட்டகலும் முயற்சியைப் பெரிதும் தடைப்படுத்தும்.

அமைப்புகள்

திட்டமான மெய்யறிவு ஒன்று உண்டு. அதையன்றி அறிவு இல்லை. எந்தப்படி கடந்தும், எத்தனை தொல்லைப்பட்டும், எவ்வளவு காலந்தாழ்த்தும் சுற்றியும் அதை நாம் அடைவது உறுதி. அதை அடைந்தும் உழலும் வாழ்க்கைக் கடலில் உலையா அடித்தளப்பாறையை நாம் எட்டியவர்கள் ஆவோம். அப்போது வாழ்வின் மலைப்புகள் அகலும். அதன் நிலைப்புகழ் வந்தெய்தும். அந் நிலையடைந்தோர் அடையாதோறுக்கு அமைத்த நூலேணிகளே அமைப்புக்கள். அவற்றைச் சென்று எட்டிப்பயன்படுத்தும் வாய்ப்புடையவர் அவ்வமைப்புக் களை மாற்றாமலே முன்னேற்றுவர். தம் போக்குக்கு அவை தடையாவன என்று கருதுவோர் அதற்காக அமைப்பைக் குறைக்கூறிக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. அமைப்பை ஆக்கியவர்களைப் பின்பற்றி அதனைப் பயன்படுத்தவோ, மாற்றியமைக்கவோ, ஒழித்து வேறு ஆக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு.

அமைப்புகள் தோன்றும் வகையையும் அவற்றை மாற்றியமைக்கும் வகைகளையும் இச்சிறு நூலில் ஆராய்வோம்.