உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

35

நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் பிறருக்கு எவ்வளவு விடுதலை என்பதைத் தான் ஒத்துக் கொள்வது அரிதாயிருக்கிறது. ஏனெனில், நமக்கு எவ்வளவு கூடுதல் கிடைக்கிறதோ, அந்த அளவு அதுபிறருக்குக் குறைகிறது.

டாக்டர் ஜான்ஸன்.

நம் விடுதலையை நாம் நுகர்வது நாட்டின் ஆட்சித் துறையில் மட்டுமன்று. நாள் முறை வாழ்வில் ஒருவர்க்கொருவர் எப்போதும் அதை வழங்குகிறோம். அவரவர் மனம்போல் நடக்க விடுகிறோமே யன்றி, நாம் அதில் தலையிட்டுக் கண்டனம் செய்வதில்லை. இது ஏனெனில், அங்ஙனம் கண்டனம் செய்வது (சட்டப்படி) தண்டனை யாகாதானாலும், அதனால் அவர்கட்கு வருத்தம் உண்டாகும்.

பெரிக்ளிஸ்.

மனிதன் விடுதலை யுரிமையுடனேயே பிறக்கிறான். ஆனால் எங்குமே அவன் தளைப்பட்டிருக்கிறான்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா

ரூசோ.

செய்தொழில் வேற்றுமை யான்.

திருவள்ளுவர்.

சுதந்தர நாட்டில் கூக்குரல் மிகுதி; ஆனால் துன்பம் குறைவு. வல்லாட்சி நடைபெறினும் நாட்டில் குறையிரத்தல் என்பதே கிடையாது. ஆனால் மக்கள் மனக்குறை மிகவும் பெரிது.

கார்னாட்.

பிறர் விடுதலை மறுப்பவர்கள் தாமும் அதற்கு உரிய வராகார். தெய்வ நேர்மையின்கீழ் அவர்கள் நெடுநாள் அதனை நுகரவும் மாட்டார்.

ஆபிரகாம் லிங்கன்.

டுதலையை நன்கு பயன்படுத்தும் தகுதி வரும்வரை, எவரும் அதற்கு உரியர் ஆகார் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையென்று கொண்டு பல அரசியல் அறிஞர்கள் பசப்புவ துண்டு. நீந்தக் கற்றபின் அன்றி எவரும் நீரில் இறங்கக்