உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

அப்பாத்துரையம் - 41

மன்னர் இளங்கோக்கள் வாழிலென், வீழிலென்?

உன்னும் நொடியில் அவர் வாராரோ போகாரோ? ஆயின் ஒருநாட்டின் உயிர்போன்ற வேளாளர்

மாயின் மறித்துப் பிறப்புறுதல் அரிதரிதே.

இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்

(பாழ்பட்ட சிற்றூர்) கோல்டுஸ்மித்.

உழவிடை விளைப்போர்.

இளங்கோவடிகள்.

ஒருவர் தம் வகுப்பைப் பற்றிப் பெருமை கொண்டால், அவர் அதற்குரியவரல்லர்; அதனில் தாழ்ந்தவர் என்பதற்குச் சான்று வேறு வேண்டியதில்லை.

ஸ்டானிஸ்லாஸ்.

23. விடுதலை

விடுதலை என்பது ஓர் எதிர்மறைப் பண்பன்று; உருப்படி யான; நுகரத்தக்க, ஒரு மெய்ப்பண்பு ஆகும்.

கார்ஃபீல்டு.

விடுதலையினால் பொறுப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான மனிதர் இதனால்தான் அது வகையில் அச்சமடைகின்றனர்.

பெர்னார்டு ஷா.

விடுதலை நம் உடைமை ஆக வேண்டுமானால், அது கட்டுப் படுத்தப்பட வேண்டும், ஆயினும் இக் கட்டுப்பாட்டைச் சமூகம் எவ்வளவு கூடுதல் சகித்துக் கொள்ளும் என்பது அல்ல, எவ்வளவு குறைந்த அளவு சகித்துக்கொள்ளும் என்பதே ஒவ்வொரு அறிவுடை யோர் குழுவும் இடைவிடாது விழிப்புடன் நுணுகிக் கவனித்து வரவேண்டிய செய்தி ஆகும்.

எட்மண்ட் பர்க்.

தத்தம் விடுதலைபற்றி எல்லாரும் கருத்தொன்று பட்டேயி ருக்கிறோம். அது எவ்வளவு கிடைத்தாலும், அவ்வளவுக்கு