உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

53

ஆடவர் அன்பு செய்வதைவிட, பெண்டிர் மிகுதி அன்பு காட்டுகிறார்கள் என்று கூற முடியுமோ, முடியாதோ ஆடவரினும் அவர்கள் நல்லன்பு காட்டுகிறார்கள் என்று கட்டாயம் கூற முடியும்.

-

துபே.

34. கடவுள்

பொருள்களின் இயல்பில் மனிதன் உள்ளத்தால், அறிவால், ஆற்றலால் முற்ற உணரமுடியாத ஏதோ ஒன்று இருக்கிறது. மனிதனால்கூட அறியப்பட முடியாத இதனை ஆக்கும் பொருள் மனிதனியல்பு கடந்ததாகவே இருக்க வேண்டும். இது கடவுளை யன்றி வேறு யாதாகத்தானிருக்கக் கூடும்?

ஸிஸரோ.

ஆங்கில (ஜெர்மானிய) இனத்தவர் கடவுளைக் குறிக்க வழங்கிய சொல்லிலேயே (God) ஒருதனி அழகு இருக்கிறது - நன்மை அவர் பண்புகளின் சிறப்புக்கூறு. ஆதலால் அவ்வடிப்படை யிலேயே அப்பெயர் அமைந்தது.

டர்னர்.

எல்லா இடமும் மையம், ஆனால் சுற்றுவட்டத்தை எங்கும் காணோம்! அவ்வெல்லையிலா மாபெரு வட்டமே கடவுள்.

எம்பிடாக்ளிஸ்.

கடவுள் என்பதற்குரிய எகிப்தியரின் சொற்குறி ஓவிய எழுத்துமுறை வடிவம் செங்கோலில் பொறித்த ஒரு கண் எல்லாம் கண்டு, எல்லாம் இயக்குபவர் அவர் என்பதை அது குறிக்கிறது.

பார்க்கர்.

கடவுளைப்பற்றிய தவறான கருத்துக் கொள்பவரை விட, கடவுளைப் பற்றிக் கருதாதவரே நல்லவர். பிந்தியவர் நம்பாதவர் மட்டுமே, முந்தியவர் அவரை அவமதிப்பவர்.

-

புளூட்டார்க்.