உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

அப்பாத்துரையம் - 41

உலகின் பருமையிலும் நுண்மையிலும் நாம் ஒருங்கே கடவுளின் அடிச்சுடுகளைக் காணலாம். இயற்கையின் எல்லை யளவில் அவர் திருத்தவிசின் திருச்சுழல்விலும், மின்மினியின் நுண்சிறகொளியிலும் அதனைக் கண்டு களிக்கலாம்

வில்லியம் கூப்பர்.

கடவுள் இல்லை என்று கருதுபவர் (உலகை உணர) வேறு ஒரு கடவுளைப் புனைந்துருவாக்கியே ஆக வேண்டும்.

வால்டேர்.

கடவுள் பெரியர், ஆகவே மக்கள் அவரை நாடுவர்; அவர் நல்லவர், ஆகவே அவரைக் காண்பர்.

ஜான் ஜே.

கடவுள் விருப்பத்திற்குரிய மனிதர் இருவகையினர் கடவுளை அறிந்தவர், இவர்கள் அவர் வழிநின்று செயலாற்றுவர். கடவுளை அறியாதவர், இவர்கள் அவரை நாடுவர்.

வாய்மை அவர் உடல்; ஒளி அவரது நிழல்.

66

பேனின்.

பிளேட்டோ.

'கடவுளுக்கு நான் அஞ்சுகிறேன்; கடவுளுக்கு அடுத்தபடி, கடவுளுக்கு அஞ்சாதவனைக் கண்டு அஞ்சுகிறேன்!”

சொற்பதம் கடந்த அப்பன்

ஸாதி.

தாளதா மரைகள் ஏத்தித்

தடமலர் புனைந்து நையும்,

ஆளலா தவரைக் கண்டால்

அம்ம நாம் அஞ்சுமாறே.

மாணிக்கவாசகர்.

35. பெண்மை

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப.

திருவள்ளுவர்.