உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

36. நூல் நிலையம்

59

என் நூல் நிலையமே எனக்குப் போதிய பண்ணைப் பெருஞ் செல்வம்.

ஷேக்ஸ்பியர்.

ஒரு நூல் நிலையத்தில் உனக்குக் கிடைப்பது என்ன என்பதை நினைத்துப்பார்! ஆயிரக்கணக்கான ஆண்டுகளிடையே உலகில் பல நாடுகளிலும் வாழ்ந்தவருள் தலைசிறந்த அறிஞர், சொற்செல்வர், கலைப்பண்பாளர் தம் கல்வியின் பயனான, அறிவின் பயனான தலைசிறந்த கருத்துக்களைத் தலை சிறந்த முறையிலும், ஒழுங்கிலும் தொகுத்த தொகுப்புக்களின் சூழல், உன்னுடன் உறவாடக் காத்திருக்கிறது... தம் உயிர்த் தோழனுக்குக் கூட அவர்கள் முற்றிலும் மனந்திறந்து உரைத் திருக்க மாட்டாத உயர் அருங்கருத்துக்கள் தெள்ளத்தெளிய வரையப்பட்டு, ஏதோ ஓர் ஊழியில் வரும் உன்னிடம் தரப்பட்டுள்ளன!

எமெர்ஸன்.

இக் காலத்தின் உண்மைப் பல்கலைக்கழகம், நூல்களின் தொகுதிதான்.

கார்லைல்.

படிப்படியாக நான் தேர்ந்து திரட்டிய என் தனிப்பட்ட நூல் நிலையமே, என் அறிவுப் பணிகட்கெல்லாம் மூல அடிப்படை; அத்துடன் என் தாயகத்திலும், புறத்தும் என் வாழ்க்கையில் ஒருங்கே இன்பமும், ஆறுதலும் அளித் துள்ளவையும் அவையே.

கிப்பன்.

நூல்நிலையங்கள்... பண்டை உலகின் சின்னங்கள்; இக்கால உலகின் புகழ்க் கொடிகள்!

லாங்ஃவெல்லோ.

சுவடிகளில்லாத வீடு பலகணியில்லா வீடு போன்றது. சுவடிகள் வாங்க ஆற்றலுடைய எவரும் சுவடிகளில்லாத வீட்டில் பிள்ளைகளை வளர விடுதல் தகாது. தம் குடும்பத்