உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

அப்பாத்துரையம் – 43

அமைந்துநின்று மீட்டும் பூது முயற்சி கொள்ளப் பெண்ணின் காதல் உதவும்.

மனைவியிடம் காதலன் குறிப்பறிந்து பழகுவதுடன், மற்ற உறவினருடன், சிறப்பாக மாதருடனும் அவ்வவர் தொடர்பு இயல்புகளுக்கேற்ப அணுகாது, அகலாது நேசமனப்பான்மை யுடனும், ஆதரவுடனும் பழகுதல் வேண்டும். பெண்ணின் உறவினரிடம் அவன் அன்பு சற்று மிகுதியாக இருத்தல் சால்புடையது. மனைவியும் இதுபோலவே ஆடவருடன் முழுவதும் ஒத்துறவாடு வதுடன்,பிற உறவினர் நண்பர்களுடனும்,சிறப்பாகஆடவருடனும், கணவரின் உறவினருடனும் தகுதியறிந்து பழகுதல் வேண்டும். அணுகாது அகலாது பழகுதல், இங்கும் அவசியமானது. பழக்கத்தின் அணுக்கம் அவர்கள் குடும்ப உறவு. கணவன் மனைவி பொது நட்பு ஆகியவற்றின் அளவாகவும், தொலைவு அவர்கள் உறவு, பொது நட்பு ஆகியவற்றின் தொலைவாகவும் இருக்க வேண்டும்.

ஆடவர் பெண்டிருடனும் பெண்டிர் ஆடவருடனும் பழகுமிடத்து இருவரும் எதிராளியின் பண்படிப்படையாகவே அணுக்கமும் தொலைவும் வரையறுத்துக் கொள்ளல் வேண்டும். கணவன் மனைவியரின் காதலே எல்லாத் தொடர்புகளின் அளவு கோலாதலால், இருவரும் தம் நண்பரிடமும், சிறப்பாகத் தம்மின் வேறுபட்டவர்களிடமும் தத்தம் வாழ்க்கைத் துணைவர் காதலன்பிற்கு மேற்படாத, அதனுடன் முரண்படாத அளவில் பழகுதல் வேண்டுமென்று கூறத்தேவையில்லை. உண்மையான காதல் பொறாமைக்கு இருபுறமும் இடம் வைக்காதென்றாலும், குறிப்பறியாத இடத்தில் உண்மைக் காதலளவில் பொறாமையும் வலியுடையதாகும். கணவன் மனைவியர் ஒருவர் வகையில் ஒருவர் பொறாமைப்படாது நடப்பதுடன், அப்பொறாமை கண்டவிடத் திலும், ஒரு சிறிது ஊடல், பிணக்குக் காணப்பட்ட இடத்திலும் அதனைக் கண்டு புறக்கணித்தலோ, பொருட்படுத்தாம லிருத்தலோ பெருந்தவறு. பொறாமை காதலின் வலிவுக்கொத்த வலிவுடையது மட்டுமன்று, தடங்கள் ஏற்பட்டபோது அது காதலை விழுங்கி வளரும் தன்மையுடையது. நாடகங்களிலும், புனைகதைகளிலும் இதன் பயனாகத் துயர் நிகழ்ச்சிகளை நான் காண்கிறோம்.