நல்வாழ்வுக் கட்டுரைகள்
79
பெண்ணை பிள்ளைப்பேறு, பிள்ளை வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட்டும், கணவன் நலம் பேணியும் குடும்பத்தில் தொல்லைகளை ஏற்றுக்கொற்ற வேண்டியவள். ஆதலால் அவள் உடல்நிலை, மனநிலை ஆகியவையறிந்து கணவன் அவளிடம் தனிச்சலுகைகள் காட்டவேண்டும்.
பெண்டிரே குடும்ப வாழ்வின் மென்மலராதலால், வன் அவர்களைக் கண்போல் பேணக்கடவன். அதே சமயம் பெண்டிர்க்குக் கணவனே கண் என்று கூறத் தேவையில்லை. கணவனைக் கண் என்று கருதாத காரிகையர் கண்ணிழந்தாலன்ன கடுந்துயர் அடைவது உறுதி.
குழந்தைப் பேற்றுக்குப்பின் கணவன் பொறுப்பு மிகுகிறது. ஆயினும், ஒருவகையில் மனைவியின் காதல் வாழ்வு இப்போது முன்னையினும் உரம்பெற்று விடுகிறது. குழந்தைகளால் மாதர்க்கு எத்துணைத் துன்பங்கள் ஏற்படினும், குழந்தை வளர்ப்பு அவர்களுக்கு ஒரு கடமையாக மட்டும் இல்லை. இன்பமாகவும் அமைந்திருக்கிறது. உண்மையில் பெண் விரும்பும் பேரின்பம் இதுவல்லதில்லை என்னலாம்.
ஆடவனுக்கும் குழந்தைகள் இன்பம் கொடுத்தல் உறுதியாயினும் இஃது அவன் காதல் வாழ்வின் பண்பையே பொறுத்தது.
மனைவியைப் பேணாது குழந்தைகளைப் பேணிப் பரிவு காட்டும் கணவர் உண்டு. இது சுவரை விட்டுவிட்டுச் சித்திரத்தைப் பேணுவது போன்றதேயாகும். உண்மையில் தான் உடல் நலமும், உளநிறைவுமன்றிப் பிள்ளைகள் உடல் நலத்துக்கும் உள நலத்துக்கும் உத்தரவாதமளிப்பவை வேறு எதுவுமில்லை. மனைவியைப் பேணிய கணவன் குழந்தைகளிடம் கொள்ளும் இன்பம், எதிரெதில் நிலைக் கண்ணாடிகளில் தோன்றும் எண்ணற்ற நிழலுருக்கள் போல, அவனிடமிருந்து மனைவியிடமும், மனைவியிடமிருந்தும் அவனிடமும் மாறிமாறிப் பரந்து பெருகும்.
பெண்டிருடன் பழகுவதும் குழந்தைகளுடன் பழகுவதும் ஆடவர்க்கு ஒரு கலை பெண்டிருக்கோ கணவனுடன் பழகுவதும் பிற ஆடவருடன் பழகுவதும் தான் கலை ஆகும். முன்னது காதலின் பயனாக வரும் இயற்கைக் கலை; பின்னது சமூகப்