உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

அப்பாத்துரையம் – 43

பழக்கம்; கல்வி, ஆடவர் பண்புகளை அறிதல் ஆகியவற்றால் மட்டுமே ஏற்படக்கூடும் சமூகக் கலை.

ஆண் பெண்களாகிய பெற்றோரிருவரும் குழந்தையிடம் பாசங் கொண்டு விட்டால் மட்டும் போதாது. குழந்தையின் இயல்பறிந்து வேண்டுமளவு பாசங் காட்டினும், தேவைப்படும் அளவுக்கு அதற்குத் தன்செயல், தன்போக்கு ஆகிய வாய்ப்புகள் தரவேண்டும். குழந்தை தாய் தந்தையரிடம் எவ்வாறு நடந்து கொள்கிறதோ, அதைப் பொறுத்தே அது பிறருடன் பழகும் வகையும், அதன் பிற்கால அறிவும், பண்பாடும் அமையும்.

கவே, மிகுதி அன்பு காட்டுவதன் மூலமாகக் குழந்தையைச் செயலற்றதாக்குவதோ, மிகுதி சலுகையால் முரட்டுத்தனம், பிடிவாதம் ஆகியவை உடையதாக்குவதோ தவறு. கொடுமையும் அசட்டைத்தனமும் இதனைவிடத் தவறு ஆகும்.

அன்பு, சுதந்திரம்; தவறு செய்துவிட்டு ஆதரவாக எச்சரிப்பது; வரம்புகளை அறியப் பழகுவது; படிபடியாகப் பிறருடன் எப்படிப் பழகுவது என்ற படிப்பினை தருவது

கியவை பிள்ளை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை. பிள்ளைகளைத் திருத்தும் வகையில் தண்டனையினும் அன்பு பேரிடம் கொள்ளல் வேண்டும். தண்டனையிலும் அவ்வன்பைச் சிறிது மறைத்துக் காட்டுவதே குழந்தைகளைத் திருத்துவதற்கான மிகச் சிறந்த வழி. தாய் தந்தையர் தம்முள்ளும் குழந்தையிடமும் காட்டும் பண்புகளே, குழந்தைகளையும் மறியாமல், அக் குழந்தைகளின் எதிர்கால இயற்கைப் பண்புகளாகின்றன.

சிறிது வளர்ந்த குழந்தைகள் எப்போதுமே தாய் தந்தையருடன் அடைப்பட்டிருக்க விடக்கூடாது. குழந்தையின் வளர்ச்சியில் அதனையொத்த வயதுடைய பிற குழந்தைகளின் பழகும் பழக்கம் மிக அவசியமானது. இஃது இல்லாத குழந்தைகளே பிற்காலத்தில் கூச்சமும், சமூகத் தொடர்பில் வெறுப்பும் உடையவை ஆகின்றன. குழந்தைகளை ஆண் பெண் என்று வேறுபாடின்றிப் பழக விடுவதும். அவற்றின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். சிறு பருவத்தில் பிறரிடம் பழகாத பிள்ளை வருங்காலத்திலும் மற்றவர் மனப்பான்மையை உணரமுடியாமல் தயக்கம் அடைகிறது. எதிர்பாலாரிடம் சில