உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

அப்பாத்துரையம் – 43

சமூக நிலைகளைப் போலவே சமயத்துறையிலும் சமூகத்தார் பேணுமளவு புறத்தோற்றங்களைப் பேணல் தேவைப்படலாம். ஆனால் புறத்தோற்றம் பேணுவது சமூகத்தின் தவறு என்று உணர்ந்து, பண்புடையாளர் அவ் வகையில் தம்மாலியன்ற அளவு சமூகத்தைத்திருத்தக்கடமைப்பட்டவர்.சமயம் என்பது உண்மையில் சமூகத்திற் கப்பாற்பட்ட மனித இனப்பற்றே ஆகும். இஃது அன்பு சார்ந்ததாகவே இருத்தல் வேண்டும். வெளித்தோற்றங்களிலும் வினை முறைகளிலும் பற்றுக் காட்டுவர், உள்ளூரச் சமயவாழ்வை அரித்துக் குலைப்பவரேயாவர்.

காதலின் பெயரைக் கண்டவிடமெல்லாம் பயன் படுத்துபவன், அதன் பெருமையைக் குலைப்பவனே யாவான். எல்லாப் பண்புகளினூடாகவும் விளங்கும் அப்பண்பு, முழு உருவில் காதலர் தனி வாழ்வுக்கு மட்டுமே உரியது.அதுபோலவே, கடவுளின் பெயரும், வாழ்க்கையின் பிற கடமைகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட உயரிடத்தில் மட்டுமே வைத்துப் பேணத்தக்கது. அதனை மலிவான சரக்காக்குபவனும், அதனைப் பிழைப்புக்கு உதவும் கருவியாக்குபவனும் கடவுட் பண்பின் பகைவர் ஆவர். உண்மைக் கடவுட்பற்றை ஒருவன் சொல்லைவிட அவன் செயலிலும், அவன் செயலைவிட அவன் நோக்கத்திலும், அச் செயலின் பயனிலுமே காணலாம். ஒருவன் கடவுளிடம் பற்றுடையவனானால், அதை அவன் காட்டுமிடம் ஒன்றே ஒன்றுதான் - கடவுளின் படைப்புகளிடம் அவன் அன்புடன் நடப்பது ஒன்றே. ஒரு நண்பனை ஒருவன் மிகுதியும் மகிழ்விக்க விரும்பினால், அவன் குழந்தையைப் பாராட்டுவதிலும் உயர்முறையிருக்க முடியாது. அதுபோலக் கடவுளுக்கும் அவர் பிள்ளைகளில் கடைப்பட்ட பிள்ளையை நேசிப்பதுபோல, உகந்த செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

காதலினும் மிகுதியாக ஒருவன் உயர் பண்புகளைக் காட்டும் பண்புக்கூறு ஒன்று உண்டு. அது துன்பம்தான். துன்பம் வந்தவிடத்துப் பண்பு குன்றுபவன் உண்மையில் பண்பற்றவனே. புடமிடும் பொன்போலப் பண்பு, துன்பத்தால் உயர்வது

தனாலேயே வெளியில் தோன்றாது அடங்கிக் கிடக்கும் பண்புகள் கூடத் துன்பத்தில் முழு உருவுடன் ஒளிரத் தொடங்குகின்றன. இத் துன்பம் தனி மனிதனை அழித்தால்கூட நாட்டை உயர்த்தும். நாட்டை அழித்தால்கூட மனித இனத்தை