6. பெற்றோர் பொறுப்பு
கால்வாங்கி நின்று தோல்வாங்கி எய்யும் அம்புபோல், ஒருவர் குழந்தைகள் அவர்கள் தலைமுறை கடந்து, கால எல்லையிலுள்ள புகழிலக்கு நோக்கி, உய்க்கப்பெறுவர் ஆவர். பெற்றோரின் நற்பண்புகளும் தீய பண்புகளும் பிள்ளைகள் மூலமாகவும், பிள்ளைகளின் பிள்ளைகள் மூலமாகவும் உலகில் நின்று பரவி நிலைபெறுகின்றன. இவற்றையறின்தோர் தம்மைப் பேணுவதிலும், தம் குழந்தைகளைப் பேணுவதிலும் கண்ணும் கருத்துமாயிருக்கக் கடவர்.
நாம் நம் முன்னோர்களிடமிருந்து பரந்து பெருகிய பசுங்கிளைகள் பலவற்றில் ஒன்றாதல்போல, நம்மிடமிருந்து பல்கிப் பெருகிக் கிளைக்கும் பல்லாயிரக்கணக்கான பசுங்கிளை களுக்கு நாம் தாய்மரமாவோம். ஆகவே, நம் முன்னோர்களின் நற்பண்புகளுக்கு நாம் ஆற்றும் கடமைகளும் உண்டு. நம் பின்னோர்களுக்கு நாம் ஆற்றும் பொறுப்புகளும் உண்டு.
நம் சின்னஞ்சிறு வழுக்களும், வடுக்களும், நம் பிள்ளைகள் வாயிலாக நம் மரபின் மாறாப்பழிகளாக வளரத்தக்கன. அவற்றை நாம் எச்சரிக்கையுடன் விலக்கவும் பெரு முயற்சியுடன் அகற்றவும் வேண்டும். நம் நற்பண்புகளும் இதுபோல் பெருகத்தக்கவை யாதலாலும், தீய பண்புகளைத் தடுப்பதற்கு நல்ல பண்புகளினும் சிறந்த கருவியில்லையாதலாலும், நம்மிடம் அவற்றைப் பெருக்குவதிலும், நம் குழந்தைகளிடம் அவற்றை உண்டுபண்ணுவ திலும், நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற பண்பில் பெருமை யடைவரிலும் நாம்குறை வைக்கக்கூடாது.
ஒழுக்க நூலார், 'அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்' என்றும் ‘தந்தை தாய்ப்பேண்' என்றும் தாய் தந்தையரிடம் பிள்ளைகள் கொள்ள வேண்டும் கடமைகளையே சுட்டிச்