உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

அப்பாத்துரையம் - 43

ஒருவர் தாயாகவோ தந்தையாகவோ குடும்பத்தில் இடம் பெற்றபின் அவர்களுக்குத் தமக்கென்றோ, தம் காதலர்க் கென்றோ கூட பிள்ளைகளின்ப மல்லாத வேறு இன்பம் இருக்கக்கூடாது; இருப்பதும் உண்மைக் காதல் வாழ்வின் இயல்பல்ல. பிற்காலத்தில் பிள்ளைகள் காதல் வாழ்வை மதித்தறிவதற்கும் அதற்குத் தகுதியுடையவர்கள் ஆவதற்கும், சமூக வாழ்வில் ஈடுபடுவதற்கும் இதனிலும் உயரிய வழிகாட்டும் பண்பு வேறு இல்லை. குழந்தைகளைத் தொல்லையென்று கருதும் தாய் தந்தையர், குழந்தைகளை வேலையாட்களிடம் விட்டுவிட்டுத் தாம் தனிவாழ்வு வாழும் தாய் தந்தையர் ஆகிய இருசாரரும் பணத்தைப் பூட்டி வைத்துப் பட்டினி கிடக்கும் மிடியர்களே யாவர். தாய்க்கும் சரி, தந்தைக்கும் சரி, பிள்ளைகளைவிட உயரிய எவ்வகை இன்பமும் இருக்க முடியாது. குடும்ப வாழ்வு அறிந்தவரும். காதலின் நிழலில் சிறிது தங்கியவரும் இதனினும் உயரிய இன்பத்தை அறியவும் மாட்டார்கள். தாம் சற்று விலகியிருந்து, குழந்தைகள் சின்னங்சிறு விளையாட்டில் கருத்துச் செலுத்தும் தாய் தந்தையர், கால எல்லை கடந்து மனித இனத்தின் வளர்ச்சியில் கருத்தூன்றித் தாம் ஒருவரா, இருவரா, பிள்ளைகளேயதாமா, தாம் பிள்ளைகளின் வேறானவரா என்று அறியமாட்டாத கடவுள் நிலையில் நின்று பேரின்பம் நுகர்வோர் ஆவர்.

பிள்ளைகளை ஊக்குவதற்கும் ஒறுப்பதற்கும் தாய் தந்தையர் வழங்கத் தக்க ஒரே கருவி தம் அன்பே. அவர்கள் நற்பண்புகள் கண்டவிடத்தும், அவற்றின் வளர்ச்சியைக் கவனிக்கு மிடத்தும் தாய் தந்தையர் பெறும் மகிழ்ச்சியினும், குழந்தைகளை ஊக்கும் திறம் உடைய பொருள் உலகில் எதுவும் இருக்க முடியாது. இவ்வுயிர் திறத்தைப் பெறாத காரணத்தாலன்றோ, அதற்கீடாக ஆசிரியர் பரிசு வழங்கவும் சமூகம் உழைப்பிற்குரிய விலை தரவும், ஆட்சியாளர் பட்டம் பதவி வழங்கவும், நேரிடுகிறது. தாயின் முத்தங்களுக்கும், தந்தையின் அணைப்புக்கும் இருவர் கடைக்கண் நகைப்புக்கும் ஒத்த பொருள்கள் உலகில் சிறப்படைகின்றன. பிள்ளைகளை ஒதுக்கவேண்டிய நேரத்தில் தாய் தந்தையர் வேறு எதுவும் செய் வேண்டுவதில்லை. நிலையாயுள்ள தம் அன்பைச் சற்று மறைத்துக் காட்டினால், தம்

ன்பத்தைச் சற்றுக் குறைத்துக் காட்டினால் போதும்!