உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

91

பெரிதும் உரியவர்கள். ஆனால் சமூகக் கல்வியிலும் உயர் கலைக் கல்வியிலும் பெண் பிறப்பாலேயே ஆடவனுக்குத் தாய் ஆவாள். இயற்கை அவள் உடலை மென்மையாக்கி, உயிர்ப் பண்பை விரைவுபடுத்தி, அவள் அறிவை, உயர் பண்பாகிய கலைப் பண்பாக்குவதன் காரணம் இதுவே. ஆகவே, தொழிற் கல்வியைவிடக் கலைத் தொழிற் கல்வியும் கலைப் பயிற்சியும், சமூகக் கல்வியைவிட மனித இனக் கல்வியும் அவளுக்கு மிகமிகத் தேவையாகும். ஆணாகிய நாணுக்குப் பெண் வளைத்துக் கட்டப்பட்ட வில் வளைவு ஆவாள். வில்லின் வளைவே நாணின் முறுக்கிற்கும், அம்பின் விரைவிற்கும், இயக்குதற் காரணம் ஆகும்.

தாய் சிறப்பாகவும் தந்தை பொதுவாகவும் பிள்ளைகளிடம்

எப்போதும் அன்புடையவராகவும், இன்முக முடையவராகவும் இருப்பதற்குரியர். பிள்ளைகள் முன் தாய் தந்தையர் வாழ்வும் தொடர்பும் பேச்சும் இதுபோலவே அவர்கள் முழு வாழ்க்கைப் பண்பின் முதிர்கனியாயிருத்தல் வேண்டும். அவர்கள் குழந்தை களிடம் எப்போதும் தம் இரு கண்களில் ஒரு கண்ணை ஈடுபடுத்தியே இருத்தல் வேண்டும். ஆனால் அதேசமயம் அவர்கள் பிள்ளைமை வாழ்க்கை பிள்ளைகளுக் குரிய சூழ்நிலையில், தாய் தந்தையர் அன்பில் மட்டுமன்றி, பிற பிள்ளைகள்,

உயிரினங்கள், இயற்கைச் சூழல்கள் ஆகியவற்றிடையேதான் முழு வளர்ச்சி பெறுமாதலால், தாம் செல்லுமிடத்திலெல்லாம் அவர்களை இட்டுச் செல்லாமல், அவர்கள் செல்லும் வழியெல்லாம் விட்டுத்தான் பின்தொடர்ந்து காப்பவராகவே இருத்தல் வேண்டும். அனுபவமிக்க பல தாய் தந்தையர் தம் பிள்ளைகள் வாழ்வைத் தமக்குச் சிறை என்று கூறுவதை நாம் கேட்டிருக்குறோம். காதல் வாழ்வு அவர்கட்கு ஒரு பொற்கூண்டாகவும் இருக்கத்தக்கதென்னலாம். ஆனால், எக் காரணத்தாலும் தாய் தந்தையர் சிறை, அவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு சிறையாகக் கூடாது. அவர்களும் தமக்குரிய பருவத்தில் காதலென்றும் சிறைக் கூட்டில் அடைபடும்வரை அவர்கள் தங்குதடையற்ற விடுதலை வாழ்வு வாழவேண்டியவராவர் என்பதையும், அவர்கள் பொறுப்பு, பாதுகாப்பு ஆகிய யாவற்றையும் இயற்கை தாய் தந்தையரிடம் விட்டு வைத்துள்ளது. இதனாலேயே என்பதையும், தாய் தந்தையர் உணரவேண்டும்.