124
அப்பாத்துரையம் - 43
கட் குடித்தவரிடையே, சூதாடியவரிடையே உயர்ந்தோர் என்பவர் மேலுலகப் பாலம்வரை பெற்று, இவ்வுலகில் வாழ்வும் பெறுவர்; ஆனால், தாழ்ந்தோர் இவ்வுலகிலேயே துன்புறுவர். இஃது ஏன் என்ற சிந்தனை யாருக்கும் ஏற்படுவதில்லை. இது போலவே பொய்யும், வஞ்சமும் மேலோர் வாணிகத்தில் விலக்கப்படாத செயல்கள், வேதாந்திகள், ஒழுக்கவாதிகள் ஆகியவர்களின் அறவுரைகள் வயிறு நிறைந்த உயர்ந்தோர் சிந்தனையைக் கிளறுவதில்லை. ஆனால், பசிப்பிணியால் வாடும் ஏழைகள் துன்பம் இவ்வுலகத்துடன் முடிவதன்று. இனி ஏழைகள் துன்பம் இவ்வுலகத்துடன் முடிவதன்று. இனி மற்றோர் உலகத்திலும் அல்லது பிறப்பிலும் தண்டனை உண்டு என்ற எண்ணத்தால் அவர்கள் வெந்துயர் அடைகின்றனர். பழிபாவச் சிந்தனையற்ற மேலோர் இரு உலகக் கவலையுமற்றிருக்க ஏழையர் இரு உலக இன்னல்களையும் எண்ணி எண்ணி நலிகின்றனர்.
இன்றைய மக்கள் வாழ்வில் தனி மனிதன் வளர்ச்சியில் மேலோர் முனைந்து முயல முடிகிறது. அவர்கள் இயல்பிலேயே உயர்ந்த வாழ்க்கைத் தரம் உடையவர்கள். அவ் வாழ்க்கைத் தரத்தை அவர்கள் மேன்மேலும் வளர்க்கப் பாடுபடுகின்றனர். ஏழையர்களுக்கோ வாழ்க்கைத்தரம் பற்றி எண்ணுவதற்கே வழியில்லை. அவர்கள் வாய்க்கும் கைக்குமாகப் பாடுபட வேண்டியிருக்கிறது. அவர்கள் வாழ்க்கைத் தரம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே போவதும் அரிதன்று. இந்நிலையில் அவர்கள் நோக்கம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன்று, வாழ்வது மட்டுமே. அஃதாவது சாகாமல் உயிர் பேணுவதற்குப் போதிய குறைந்த அளவு உணவு, உடை, உறையுள் வாய்ப்புப் பெறுவதே. இதற்குமேல் அவன் அவாவுவதரிது. அவாவினாலும் இதனை ஆதிக்கவாதிகள் கண்டிக்க வந்துவிடுவர்.
'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற வேதாந்தம் அவனுக்குப் போதிக்கப்படும். இவ் வேதாந்தம் செல்வனுக்கு அறிவுரையாவது மில்லை; அவன் வன்னல் மேம்பாட்டை இது குறைகூறஞ் செய்யாது. பொது மக்களிடையே ஒரு சிலர் இவ் வேதாந்தத்தைப் புறக்கணித்து முனைந்து தம் வளர்ச்சியில் முயன்றால், அவர்கள் வெற்றி பெறும்வரை ஒழுக்க அறிஞர் அவர்களைக் குறை கூறலாம்.