நல்வாழ்வுக் கட்டுரைகள்
125
அவர்கள் தோல்வியுற்றால், நையாண்டி செய்யலாம். ஆனால், வெற்றி பெற்றால் மேலோர் சமூகம் அவர்களைத் தம் வகுப்பில் ஒருவராக வரவேற்கும் அவனும் முன்னாற் கந்தையாடையுடன் எச்சலுக்குக் காத்திருந்தவனேயாயினும், பந்தியில் உடனிருந்து உண்ணும் உரிமை பெற்றபின், தன் உச்சி குளிர்ந்து தலைதிரிந்து தன் முன்னிலையையும், அந்நிலையில் இன்னும் உள்ள தன் தோழரையும் மறந்து, புகு வகுப்பின் உறுப்பினனாய்ச் செயலாற்றுவான். இவ் வகையில் ஏழையரிடையே தனி மனிதன் முன்னேற்றம், ஏழைக்கு உதவுவதில்லை. செல்வனுக்கே உதவும்.
படைவீரரும், அறிஞரும் பொது மக்களிடையேதான் பிறப்பர். மேலோரிடையே பிறத்தல் அரிது. ஆனால், இந்த வாழ்வின் நலத்தையும் ஏழைகள் பெறுவதில்லை. மேலோர் வகுப்பில் அருகலாப் பிறந்த அறிஞரும் வீரரும், அவ்வத் துறைகளில் உயர்நிலை பெறுவது உறுதி.மேலோசை ஆதரிக்கும் வீரரும் அறிஞரும் அவருடன் இடம் பெறலாம். எனவேதான் ஏழை செல்வனானால், ஏழை வகுப்பு பயன்பெறாதது போலவே, ஏழை வீரனானாலும், அறிஞனானாலும் அவ் வகுப்புப் பயன் பெறுவதில்லை. ஏழைகட்கு உதவவேண்டும் என்று கருதும் அறிஞனும் உலக மக்கள் அனைவருக்குமே நலம் செய்ய வேண்டும் என்று கருதும் அறிஞனும் அவ் வழியில் உழைக்க எத்தனையோ தடைகள் உண்டு.
ஏழைகள் மேலோரால் அறிஞன் என்று காட்டப் படுபவரையே அறிஞராகக் கருதும் இயல்பினர். தவிர மேலோர் அறிஞரைத் தமக்கியைய ஓர் அளவு உயர் வாய்ப்பளித்து உயர்த்தி விடுவதால், அறிஞரும் மேலோராயிருத்தல் வேண்டும் என்று ஏழை கருதிவிடுகிறான்.எனவே, செல்பவரால் பாராட்டப் படாத அறிஞன், அறிஞனாவதற்கே வழி குறைவு; வாய்ப்பும் குறைவு. செல்வர் ஆதிக்கத்தை அவன் சிறிதளவு எதிர்த்தாலும், அவனுக்கு வாழும் வகை கிடைப்பதரிது. இதனாலேயே உலகப் பற்றாளராகிய அறிஞர், பிறருக்கு உழைக்க முனையுமுன், பிறரைச் சாராது, செல்வரை நம்பியிராமல், தாமே தம் வாழ்க்கை வாய்ப்பைத் தேடிக் கொள்ள வேண்டியவர் ஆகின்றனர். அஃதாவது எளிய வாழ்க்கை யாயினும், தற்சார்பும் தன்னுழைப்பும் உ உடைய வாழ்க்கை வாழும் அறிஞனே, செல்வரை