நல்வாழ்வுக் கட்டுரைகள்
127
தனிவாழ்வு உடையவராய் விட்டனர். இவற்றை மாற்றியமைக்கும் பொறுப்புத் தமிழர் ஒவ்வொருவருக்கும் மட்டுமன்றி, தமிழரின் நண்பர், தமிழக நண்பர், 'நாடன தமிழினத்தவன்' என்று கூறிக்கொள்ளக் கூசாத ஒவ்வொருவருக்குங்கூட உரியது.
தாழ்ந்த தமிழகத்தை உயர்த்தும் செயல் மிகக்கடுமை வாய்ந்ததேயாயினும், அதுவகையில் அரசியல், சமயம், மொழி, பண்பாட்டுச் சிக்கல்கள் ஏராளமாயினும், இவற்றை எதிர்த்துப் போராட முன்வரும் வீர அறிஞருக்கு இயற்கை தரும் உதவிகள் பல. தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் ஒப்பற்ற உலகப் பொதுமறையான திருக்குறள் ஆகிய மூன்றும் அவர்கள் கையில் ஒப்புயர்வற்ற தனிப்பெரும் படைகள் ஆகும். தமிழர் பண்பு, தமிழர் குறிக்கோள், தமிழர் ஒழுக்கம் ஆகியவை இவை எனக்காட்டி, அவற்றுக்கு இணக்கமுடைய அயற்பண்புகளை ஆதரிப்பதற்கும், அவற்றிற்கு முரண்பட்ட அயற்பண்புகளை எதிர்ப்பதற்கும் இவை பேருதவியாகத்தக்கன. மேலோருள் தமிழகத்துக்குப் புறம்பான நாடு, மொழி, இனப் பண்புகளைத் தமிழருக் கெதிராகத் திணிக்க முற்படுபவரும், அவர்கள் கண்காணியரும் தவிர, மற்ற எவரும் மேலோர் என்பதற்காக இப்பகைகளை எதிர்க்கத் துணியமாட்டார்; விரும்பவும் மாட்டார்.குணத்தால், அஃதாவது அறிவுத்திறம், உழைப்புத்திறம், அன்புத்திறம் ஆகியவற்றால் உயர்ந்தோரும் மற்றோரும் என்ற வேற்றுமை தவிர தமிழகத்தில் வேறு எந்த வேற்றுமையையும் தமிழ்ப் பண்பாளர் விட்டுவைக்க ஒருப்படமாட்டார்.
ம்
எனவே, தமிழ்ப்பண்பை வளர்க்கும் ஒரு செயலால் தமிழறிஞன், பொதுமக்கள் அரசியலில் சரிசமப் பங்கு கொள்ளவும், சமயத்தில் சரிசம உரிமை பெறவும், பொருளியல் வாழ்வில் சரிசம நேர்மையும் வாய்ப்பும் பெறவும் வழி வகுத்தல் முடியாததன்று. ஆகவே, அவன் வேலை இவ்வகைகளில் பிறநாட்டார் வேலைகளிலும் எளிதாகின்றது. தமிழிலக்கியத் தினிடமாக, சிறப்பாகச் சங்க இலக்கியத்தினிடமாகவும், திருவள்ளுவர் திருக்குறளினிடமாகவும் தமிழனுக்கு அமைந்தது போல் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வேண்டிய எல்லாப் பண்புகளையும் ஒருங்கே கொண்ட ஓர் இலக்கியமோ, ஒரு நூலோ உலகில் வேறு எம்மொழியாளருக்கும் அமைந்ததில்லை.