நல்வாழ்வுக் கட்டுரைகள்
133
அன்பால் நெருக்கமுற்று ஒன்றுபடலும், ஒரே பிரிவு அன்பின்மையால் பிரிந்து படலும், சீரழிதலும் உண்டு. ஆயினும் எல்லா இடத்திலும் இவ்வன்பு பெருகித்தழைப்பதில்லை. இருபுறமும் அன்பு பூத்தாலன்றி, அன்பின் பயன் பெரிதாயிருக்க முடியாது. பெரியார் அன்பிலாரிடத்தும் அன்புகாட்டக் கூடுமாயினும், இஃது அன்பிலாரை மாற்றியமைக்க உதவினாலல்லது, பயனற்ற அன்பாகவே போய்விடும். ஆகவே, அன்பொத்தவரிடையே அன்பும் செயலாற்ற முடியும். சரி ஒப்பில்லாதவரிடம் அன்பு வளராததன் காரணம் இதுவே.
வாழ்வில் எல்லாருக்கும் அவர்கள் தேவைக்கு முழு நிறைவு பெறுவது; அதே சமயம் எல்லாரும் அவர் ஆற்றல் முழுவதும் பொது வாழ்வுக்கு அளிப்பது; ஆகிய இவையே அறிஞர் கனாக்காணும் உலக நாகரிக இலக்காகும். இப்போக்குடன் ஒத்துழைப்பதே தனிமனிதர் கடமை; ஒத்துழைக்கும் அறிவுடையாரே அறிஞர்; ஒத்துழைக்கும் விருப்பமுடையவரே நல்லார். ஒத்துழைத்து வெற்றி காண்பவரே பெரியார், அதுவே வாழ்க்கையின் குறிக்கோளும் ஆகும்.