உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

||-

அப்பாத்துரையம் – 43

எண்ணினால் அக்கடமைகள் சீரழியும். பத்தர் புரோகிதராவதும், வணிகர் தரகராவதும், ஆட்சியாளர் கொடுங்கோலர் ஆவதும் தனாலேயே. ஊதியம் மனிதரென்ற முறையில் அனைவரும் பெறத்தக்க ஒன்றே. கடனாற்றுவதும் அவ்வாறே. எனவே, கடனுக்கேற்ற ஊதியம், ஊதியத்துக்கேற்ற கடன் என்று அளவு கூற முடியாது. சில சமயம் சில கடமைகளை யாற்றுபவர்க்கு ஊதியம் கருவியாய் அமையும். இதனைக் கடமைக்கேற்ற உயர் ஊதியம் என்று உலகம் எண்ணுவதனால், உலக நாகரிகம் கெடுகிறது. அவ்வூதிய விருப்பால் அக் கடமையைத் தகுதியற்றோர் ஏற்றுவிடுகின்றனர். பத்தியற்றோர் புரோகிதராகவும், திறமையற்றோர் அரசியலாராகவும், அறிவற்றோர் ஆசிரியராகவும் இங்ஙனம் வரநேர்ந்து விடுகிறது.

வாழ்வில் வாய்மை யின்மையால் வருங்கேடுகளில் மிகப் பெரிது,“வேடநெறி நில்லார் வேடம் பூண்டொழுகும்” கீழ்மையே யாகும். இது கடமைகளுக்கு அளந்தூதியம் தருவதனால் ஏற்படுவதேயாம். தகுதிகளுக்கு அல்லது பண்புகளுக்கு உரிய சின்னங்கள் தகுதியற்றோரால் மேற்கொள்ளப் படுவதனால், புறவேடம் வற்புறுத்தப்படுகிறது. உலகில் சமயவாழ்வு மிகுதியும் கெடுவதற்கு மக்களிடையே பெருகியுள்ள புறவேட மதிப்பே காரணம். புறவேடம் பொய்த்துவிடின் அதனை ஒழிக்கும் நிலை ஏற்படாமலிராது. அதற்குரிய அகப்பண்பின் மதிப்பும் கேடுறும். சமய வினைகளும் பழக்கவழக்கங்களும் சட்டதிட்டங்களும் புற வேடங்களே. இவற்றை, இவற்றின் அகப்பண்பு அறிந்தோர், தலைமை வகித்து நடத்தாதவிடத்தில் அவை பொய், சூது, வஞ்சம் முதலிய எல்லாப் பழிகளும் உறையும் இடமாய்விடும்.

சமூகப் பிரிவு, குடும்பம், நாடு, இனம் ஆகிய எல்லா இயற்கை எல்லைகளும் இயற்கை வாழ்வில் வெவ்வேறு படியுடைய எல்லைகளாயினும் இவற்றிடையே உள்ள தொலை அவ் வெல்லை பேணும் பொது அன்பு, விட்டுக் கொடுப்பு, தியாகம் ஆகியவற்றின் எல்லையேயாகும். தனிமனிதரில் கடந்த அறிவு, அருளன்பு, தியாகம் ஆகியவற்றின் எல்லையேயாகும். தனிமனிதரில் கடந்த அறிவு, அருளன்பு, தியாக நிலை உடையவர் இவ் வெல்லை கடந்து செயலாற்றுபவராதலால், இவர்கள் எல்லை கடந்த புகழும் உரிமையும் உடையவராவர். பல பிரிவுகள்