உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

143

கடவுளின் சின்னமாகவும் கொள்ளப்படுகிறது. இச் சின்னங்கள் நன்மை, தீமைகளின் தொடர்புகளை நன்கு எடுத்துக் காட்டுபவையே. இயற்கையின் இருள் ஒரு புள்ளி அளவிலேயே இருக்கிறது. ஞாயிறும் கோடிக்கணக்கான விண்மீன்களும் ஒளிக்கோளங்களே. அவற்றின் ஒளி இயல்வெளி எங்கும் எப்போதும் நீக்கமற நிறைத்தே இருக்கிறது. அவ்வொளி மறைக்கப்படுவது ஒளிக்கூறற்ற நிலஉலகு முதலிய ஒரு சில கோள்களில் மட்டுமே. அவற்றுள்ளும் ஞாயிற்றை நோக்கி இராத ஒரு பாதியே எப்போதும் தன்னிழலால் தன்னை மறைத்துக் கொள்கிறது. நிலம் இங்ஙனம் எல்லையற்ற ஒளியின் அகல் வெளியிலே தன்னிழலால் தன்னைத் தற்காலிகமாக மறைத்துக் கொள்வது. தன் குறைபாட்டால் அல்லது அறியாமையால் உயிர் தற்காலமாக அடையும் தீமைக்கு ஒரு நல்ல சின்னமே யாகும்.

தீமை எப்படி ஏற்படுகிறது என்பதன் விடை எளிது. இற்கையின் இயல்பாக நன்மைபற்றிய மனிதன் அறியாமையி லிருந்தே தீமை பிறக்கிறது. ஆனால் தீமை ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விடை விளக்கம் இதனினும் முக்கியமானது. நிழலில்லாமல் ஒளியை நாம் காணமுடியாது. அது போலத் தீமையில்லாமல், தீமை நன்மைகளின் இயல்பு களை நாம் உணரமாட்டோம். இவையே தீமையின் படிப்பினைகளும் பயனும் ஆகும்.

இயற்கையின் தங்குதடையற்ற நிறைநன்மை மனித னிடத்திலும் தங்குதடையற்று இருக்குமானால், தீமையின் படிப்பினைகளை மனிதன் அறிய மாட்டான். அதனால் நன்மையும் அவனுக்கு உருவற்றதாய்விடும். அவன் நன்மையின் இயல்பை உணரமாட்டான். நன்மையை இயக்கியாள்வதற்கு மாறாக, அதற்கு அடிமைப்பட்டு விலங்காய் வாழ்வான்.

தீமையின் படிப்பினைகளை அறியாதவன் மேன்மேலும் தொடர்ந்து தீமைக்கு ஆளாகிறான். அவன் நாடும் இன்பங்களே அவனுக்குத் தீமைகளாவதால், நாளடைவில் அவன் நீடித்த,

டத்தட்ட நிலையான தீமையில் கிடந்து உழலுகிறான். அவன் நிலை இருட்டறையில் கதவுபலகணி அடைத்துக்கொண்டு ஒளி என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவன்