உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(144) ||.

அப்பாத்துரையம் – 43

நிலையையே ஒத்தது. அவன் அறைக்கு வெளியே எங்கும் வெளிச்சம் பரவியுள்ளது. ஆனால் அறையில் மட்டும் அதை விடாது பூட்டிக் கொண்டு, இருட்டை உண்டுபண்ணிக் கொண்டே, அவன் இருட்டு விலகமாட்டேன் என்கிறது என்று கூறுகிறான். தப்பெண்ணங்கள், மூட நம்பிக்கைகள், குறுகிய தன்னலம், படிந்து விட்ட பிழைகள் ஆகியவற்றில் கிடந்து அழுந்தும் பலர் நிலை இங்ஙனம் இருட்டறையில் இருப்பவர் நிலையே. அவர்கள் துணிந்து எழுந்து தன்னலப் பலகணிகளை, மூட நம்பிக்கைக் கதவுகளைத் திறந்தால், எங்கும் பரவிய ஒளியைக் காண்பர். அறையின் இருளும் கணத்தில் மறையும்.

தீமை என்பது தற்காலிகமானது; மனிதன் தானாக வருவித்துக் கொள்வது அல்லது விரும்பி ஏற்பது என்ற உண்மையைச் சிறிய தன்னாராய்ச்சி காட்டிவிடும். ஆழ்ந்த தன்னாராய்வு அதில் திட்டமான அறிவை உண்டாக்கும். நீடித்த ஆழ்ந்த ஆராய்ச்சியும் பயிற்சியும் அதில் உறுதியான நம்பிக்கை உண்டு பண்ணும். இந்நிலையை அடைந்தவன் தீமைக்கு அஞ்சான். ஏனெனில் அவன் தீமையை விரும்பி வரவேற்றாலன்றி அது வரமாட்டாது என்பதை அவன் அறிவான். நன்மை வரவில்லை என்று அல்லது பெருகவில்லையென்று அவன் ஏக்கமடைய மாட்டான். ஏனென்றால் அதன் தகுதியை வளர்த்த அளவுக்கு, அது கட்டாயம் வரும் என்பதை அவன் உணர்வான். தன் விருப்பம், தன்னறிவு, தன் தகுதி ஆகியவற்றை வளர்ப்பதால் அகச் செல்வம் பெருகும் என்பதையும், புறச் செல்வத்தாலும் பெறமுடியாத நல்லின்பத்தையும் ஆற்றலையும் அவ்வகச் செல்வம் தரும் என்பதையும் அவன் காண்பான். இதனால் அவன் தானே தன் ஊழின் முதல்வன் ஆகிறான்.

இன்றும் நின்றது சூரிருள் எத்துணை

காவல்காரா

மின்னும் பாலொளி கண்டிலையோ இனும்

(காவல்)

மின்னும் பேரொளியின் ஒளியின் சின்னம்

(காவல்)

துன்னும் மேட்டில் முருகுடையோன் பதம்

(காவல்)

கண்டிலையோ இனும்சீறடி காரிருள் ஓட்டுவதை?

திண்டிறலார் இருள்தெய்வங்கள் தம் அணிச்சீர்

குலைவை!

(காவல்)