திருநிறை ஆற்றல்
155
எத்தனையோ செய்திகளை முன்பின் ஆராயாமல் நம்புகிறாயே, நம்பி ஏமாந்தபிறகும் நம்புகிறாயே! இந்த ஒன்றை நம்பிப்பார்! நீ பின் என்றும் ஏமாறமாட்டாய், ஏமாப்பு அடைவாய்! ஐயந்திரி பின்றி உள்ளத்தில் இதை அழுத்தித்தோய வை. இதை உறுதியாக நினை. பின் நீ உணர்வாய். நீ தூய்மையுறுவாய்; உன் அக உலகைப் பொன்னுலகாகக் கட்டமைத்துவிடுவாய். நீயே உன் உலகின் இறைவன் என்பதைக் கண்ணார, கருத்தார, செயலாரக் காண்பாய்.
கலகித் தோங்கிய காடு பூங்காவென உலர்ந்தபாலை உளங்கொளும் சோலையா, இலகு தீமைகள் இன்னல்கள் எகியே உலகுசெம்மை யுறநீ அவாவிடில்,- உன்னை நீ செம்மைப்படுத்துவாய்!
நீடு துன்பமும் நீங்காப்பிணிகளும் ஊடறுத் திவ்வுலகு நலம்பெற
பாடுற் றோர்க்கெலாம் ஓய்வும்நல் இன்பமும்
பீடுற்றோங்க நனிநீ அவாவிடில்,-
உன்னை நீ நலப்படுத்துவாய்!
போலி வாழ்வுக் கனவிடையே மக்கள் மாலுறக் கலகித்து மாளும் நிலை ஆலித்தேகிட, அன்பும் அமைதியும் மேலிட் டோங்கும் ஒளிநீ அவாவிடில்,- நீ நின் நீள்உறக்கம் ஒழித்தோட்டுவாய்.