154
அப்பாத்துரையம் - 43
அனுபவங்கொண்டு மக்கள் தத்தம் பண்புகளில்
திருந்திக் கொள்ளாதவரை, அவர்கள் தத்தம் பண்களின் வண்ணமாகவே வளர்ந்து, அவ்வண்ணமாகவே உலகையும் வளர்ப்பார்கள். அதுமட்டுமன்று; தம் வண்ணங்களையே அவர்கள் தம்மைச் சுற்றிலும் கவர்ந்தீர்த்துத் திரட்டுவர். "இனம் னத்தோடே" என்ற பழமொழி இவ்வகையில் அதன் புறப் பொருள் கடந்து அகப்பொருள் செறிவுடையது. நற்பண்புடை யோர் நற்பண்புகளை வளர்த்து நற்பண்பாளர்களைத் தம்மைச் சுற்றிலும் திரட்டுகின்றனர். பிறரையும் படிப்படியாக நற்பண்பாளர் ஆக்குகின்றனர். 'அற்பண்பு'டையோர் இது போலவே தீய பண்புகளை வளர்த்துத் தீய பண்பாளர்களைத் திரட்டிப் பெருக்க முனைவர். ஆனால் இப்போட்டியில் தீயபண்பு வெற்றியுறுவது அரிது. ஏனெனில் தீயபண்பு நல்லவர்களை அழித்துத் தீயவர்களையும் அழிக்கப் பார்க்கிறது. நல்ல பண்போ நல்லவர்களையும் காத்துத் தீயவர்களையும் காக்கப் பார்க்கிறது.
அன்பு நாடுவோர் அன்பே வழங்குக!
வாய்மை நாடுவோர் வாய்மையே கொள்க! மன்பதைக் கெதுநீ வழங்கினை, அதுவே
மன்பதை ஆம்உனக்கு; உன்மனம் அதுவே.
இறப்புக்குப்பின் ஓர் இன்ப உலகங்காணும் அவா வுடையவனாக நீ இருந்தால் இறக்கும்வரை நீ அதற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. அதை இப்போதே முழுவதும் பெறுவதற்குரிய நற்செய்தி ஒன்றை நான் உனக்குக் கூறமுடியும். அவ்வுலகம் உன்னருகே, உன்னைச்சூழ, உனக்குள்ளேயே இருக்கிறது. நீ அதற்காகக் காத்திருக்கவில்லை. அது உனக்காகக் காத்திருக்கிறது. அதோ அங்கே, இதோ இங்கே என்று கூறுபவரை நம்பி, நீ அங்கும் அங்கும் அலைய வேண்டாம். நீ இருக்கும் இடத்திலேயே, உன் உள்ளேயே அது அடைபட்டுக் கிடக்கிறது. நீ எங்கும் போகவேண்டாம். எதுவும் செய்ய வேண்டாம். கதவைத் திறந்தால் போதும். அல்லது கதவைத் தட்டினால் போதும். அது தானாகத் திறந்து விடும். கதவு தட்டுவது என்பது வேறு ஒன்றுமல்ல. உன் இன்ப உலகம் உனக்குள்ளேயே இருக்கிறது” என்பதை நீ நம்ப வேண்டும். நீ
0