உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

173

கவலையில் ஆழ்ந்து மனம் செல்லவிடாதே. வேலையில் உள்ளத்தை ஈடுபடுத்தி அதனை ஊக்கப்படுத்து. இவ்வகையில் கவலையை அகத்தே இடம் பெறாமல் ஒதுக்கியபின், ஓய்ந்த ஒன்றிரண்டுமணி நேரங்களில் வகைதுறைகள், வழி துறைகள் பற்றிச் சிந்தி. உன் அகத்தினுள்ளிருந்தே உனக்குத் தெய்விக உதவி வரும். துன்பநேரத்தில் துன்பத்தை நினையாமல் இன்பத்தை நினை. முடியுமானால் துன்பத்தை இன்பமாகக் கருதப் பழகு.

தனிமனிதன் தோல்வி சமூகத்தின் வெற்றியென்பதை உணர். ஆனால் அத் தோல்வியை முழுவதும் சமூகத்தின் வெற்றியாக்குவது உன் கடமையுணர்ச்சியை, மனச்சான்றைப் பொறுத்தது. “நான் என் கடமையைச் செய்துவிட்டேன். இனிவருவது வெற்றிதான். தனிப்பட்ட தோல்வி வரினும் அது சமூக வெற்றியே" என்ற எண்ணம்தான் தோல்வியைத் தடுப்பதிலும், அதை வெற்றிப் படியாக்குவதிலும், தனிப்பட்ட தோல்வியைப் பொது வெற்றியாக்குவதிலும் ஆற்றல் வாய்ந்தது. அத்தகைய மனச்சான்றுறுதியுடையவன் தன் உயிருக்கு இறுதிவரினும், இதழ்தன்னைச் சூழ்ந்து பேயாட்டமாடினாலும், தயங்காது புன்முறுவலுடனே அவற்றை அணைப்பான். அத்தகையவர்களை உருக்குலைக்கும் செய்தி உலகில் எதுவுமே

இராது.

எவ்வளவு கடுமையான சிக்கல்களையும் அமைதியான ஆற்றல் வாய்ந்த சிந்தனை தீர்க்கும் வல்லமையுடையது. ஏனெனில் அமைதியிடையேதான் அறிவின் ஒளி ஓட்டாங்க மாகச் செயலாற்றும். ஆற்றல் சிக்கல்களை அறுக்கிறது. ஒளி வழிகாட்டுகிறது. அமைதி ஆற்றலுக்கும் அறிவுக்கும் தக்க சூழ்நிலைவண்ணம் ஆக்குகிறது.

புறப்பகை எதற்கும் நீ அஞ்சவேண்டுவதில்லை. அவற்றை அல்லது அவர்களை நீ எளிதில் வெல்ல முடியும். ஆனால் அகப்பகைக்கு அஞ்சு. அது புறப்பகையை உண்டு பண்ணுவதுடன், அதனுடன் சேர்ந்து அதனை வளர்த்து வலிமைப்படுத்தும். ஆனால் புறப்பகை பெரிது. கண்ணுக்கு எளிதில் புலனாவது: அகப்பகை நுண்ணியது. கண்ணுக்குப் புலனாகாதது. அதைத் தெளிவாகக் காண அமைதி என்னும்