உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

(174) || __

அப்பாத்துரையம் - 43

விண்ணொளியும், அறிவு என்னும் கண்ணொளியும், ஆற்றல் என்னும் காட்சிக்கருவியும் சேர்ந்து செயலாற்ற வேண்டும். அகப் பகையை இங்ஙனம் கண்டபின் புறப்பகையைக் காண வேண்டிய தேவையோ, பொருட்படுத்த வேண்டிய நிலையோ இராது. ஏனெனில் உண்மையான பகை அகப்பகையே. புறப்பகை அதன் நிழல் மட்டுந்தான். அகப்பகையை நீக்கிய அன்றே, புறப்பகை அகலும்.

கதிரவனை மறைக்கும் சிறுமுகில்கீற்றின் நிழல், நிலத்தில் பல கல்தொலை அளாவிப் பரவியுள்ளது. அதுபோல சிறு நுண்துகள் அளவான அகப்பகையே மிகப்பெரிய புறப்பகையாக நிழலாடும்.

நீ எண்ணுகின்ற ஒவ்வோர் எண்ணமும் உன் உள்ளத்தி லிருந்து வெளிச்செல்கின்ற ஒவ்வோர் ஒளி அலை. இவ்வலைகள் புறப்பொருள்கள்மீது பட்டதும் அவை அவற்றைத் தம் வ வயமாக்குகின்றன. அதுமட்டுமன்று. அவை உனக்குப் புறம்பே யுள்ள பிற உள்ளங்களில்பட்டு,அவற்றில் தகுதியுடைய இடங்களில் தங்கி, அவ்விடங்களை உன் வயமாக்கி, திரும்ப உன் ஆற்றலாக உன்னிடமே வருகின்றன. அவை பின்னும் உன் உள்ளப் பண்புகளை மாற்றுகின்றன. உள்ளங்களுடன் உள்ளங்கள் இங்ஙனம் ஓயாது எண்ண அலைகள் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன.

மனித உள்ளத்தைப் பலர் தனித்த, நாற்புறமும் கட்டுண்ட நிலையான ஒரு குட்டையாக அல்லது குளமாக எண்ணுவது வழக்கம். ஆனால் உள்ளத்தின் பண்பு இதுவல்ல. ஒவ்வொரு மனித உள்ளமும் இயற்கையின் ஓர் அலையாகவே இயங்கு கிறது. அலைகள் எழுப்பும் சிற்றலைகள் அல்லது திவலைகளே எண்ணங்கள். சிற்றலைகளின் திரளாகவே அலை எழுகிறது. அதேசமயம் அது எழுப்பும் சிற்றலைகள், அடுத்த அலைகளையும் இயக்கி, அடுத்த அலைகளால் தாமும் இயக்கப்படுகின்றன. இவ் அலைகளுக்குத் தனித்த நிலையான உருவமும் வடிவமும் பொருண்மையும்கூடக் கிடையாது. ஆனால் எல்லா அலை களும் ஒரேகடலின் இயக்கக் கூறுகளே. உள்ளங்களும் இவ்வாறே முழுதும் தனித்தன்மையற்றவையாய், ஒன்றையொன்று