திருநிறை ஆற்றல்
175
இயக்கியும் ஒன்றாலொன்று இயக்கப்பட்டும், இயற்கையின் உள்ளமாகிய கடலில் அலைகள்போல எழுந்தெழுந்து அமிழ்ந்து, மீண்டும் உருவா கின்றவையே. அவற்றின் ஆக்கமும் இயக்கமும் ஒரேகடலின் பகுதியும் ஒரே கடலியக்கத்தின் ஆக்கமுமேயாகும்.
உள்ளமாகிய அலை அடுத்த உள்ளமாகிய அலையை அழிக்கும் அழிவுப் பண்பே உள்ளத்தின் தன்னலம். அடுத்த அலையுடன் மோதுவதால் அதுதானும் அழிவுக்கே ஆளாகிறது; இதையே நாம் தீமை என்கிறோம். ஓர் உள்ளத்தின் தன்னலம் இன்னோர் உள்ளத்தின் தன்னலத்தையே பெருக்கும். இதற்கு நேர்மாறாக ஓர் உள்ளத்தின் பொதுநல ஆர்வம் அடுத்த உள்ளங்களாகிய அலைகளிலும் அதே பொது நல ஆர்வத்தைத் தூண்டி, எல்லா உள்ள அலைகளையும் ஒருங்கே இயக்கும் பொது உள்ளமாகிய சமூக நலம் என்னும் கடல்வெள்ளம் இதனால் எல்லா அலைகளின் இயக்கமாக இயங்கும். சமூக நலம் வளரும் அலைகளில் இயக்கங்களின் அடிப்படை கடலே ஆவதுபோல, எல்லாத் தனி மனித நலங்களும் சமூக நலனையே மூல முதலாகக் கொண்டவை. சமூகநல வளர்ச்சி அவை எல்லாவற்றின் வளர்ச்சிக்கும் இயற்கை மூலத்தளமாகிறது. அமைதியான தூய ன்னலமற்ற எண்ணங்கள் இங்ஙனம் தனி மனிதனை வளர்த்து, சமூகத்தையும் வளர்த்து, 'எல்லார் வளத்தையும் ஒருவன் வளமாகவும் ஒருவன் வளத்தை எல்லார் வளமாகவும் மாற்றியமைக்கின்றன.”
தனிமனிதன் துன்பங்கள் சுழிகள்! சமூகத்தின் பொதுத் துன்பங்கள் புயல்கள்! நல்ல பண்புகளும் பொது நலப்பற்றும் தனிமனிதனைச் சமூகத்துடன் பிணைத்து அவன் இயங்கும் எல்லையை விரிவுபடுத்துகின்றன. சுழிகள் இந்நிலையில் அவனைத் தாக்க முடியாது. துரும்பைச் சுழற்றும் சுழி பெரிய கட்டைகளையும் படகு கலங்களையும் ஒன்றும் செய்ய மாட்டா. அதுபோலத் தன்னலச் சுழிகள் பொது நலப்பணியை அசைக்கமாட்டா. அத்துடன் தனி மனிதன் வளர்க்கும் உள்ள அமைதி சமூகத்திலும் அமைதியாய்ப் பரவுகிறது. கடலில் புயல் கொந்தளிப்பிடையே
ஊற்றப்பட்ட எண்ணெய் அவ்