(176) ||__.
அப்பாத்துரையம் – 43
வெள்ளத்தை அமைதிப் படுத்திவிடும் என்று கூறப்படுகிறது. அதுபோல இச்சமூக அமைதி புயல் வேகத்தையும் தணித் தாற்றும் ஆற்றலுடையது. உள்ள உரம், வீரம், தோல்விகளால் சலியாத மனப் பண்பு ஆகியவை அலைகளின் அழிவுச்சக்தியை தடுத்து ஆட்கொள்ளும் அலைதாங்கிகள் அலைகளின் மோதுதல் ஆற்றலைச் சுக்குநூறாக்கும் சிதறுகட்டைகள் ஆகின்றன.
அகத்தே நல்ல எண்ணங்களைப் பேணுக, அது புறத்தே நல்ல சூழ்நிலைகளை உண்டுபண்ணும் அகப் பண்புகளை உருவாக்குக. அது உன் புறவாழ்க்கையை உன் விருப்பத்துக்கு இயைந்ததாக மாற்றிவிடும். அகத்தே உயர் குறிக்கோள்களும் பொன்மயமான கனவுகளும் காணுக. புறத்தே உன் நனவு வாழ்க்கை அதேதிசையில் சென்று அதே பொன்மயமான ஒ ளியைப்பெறும். உன் உள்ளப் பண்புகள் குதிரை ஓட்டு பவன் கையிலிருக்கும் கடிவாளம். அது இழுத்தவழி குதிரை செல்லும். அது இயக்க ஊர்தியின் அச்சை இயக்கும் சக்கரம். அச்சக்கரம் திரும்பியவழி வாழ்வாகிய இயக்க ஊர்தி ஊரும்.
தனிமனிதன் தன்னடக்கமே சமூகத்தில் ஒழுங் காகவும் அரசியல் சமுதாயத்தில் தன்னாட்சியாகவும் மலர்கிறது. தனிமனிதன் உள்ளத்தின் ஒழுங்குமுறையே சமூகத்தின் பழக்கவழக்க மரபாகவும், அரசியல் சமுதாயத் தில் ஆட்சி முறைச் சட்டமாகவும் அமைகிறது. “மக்க ளெவ்வழி அவ்வழி அரசு" என்பது போல, "உள்ளம் எவ்வழி அவ்வழி மக்கள்” என்றும் கூறலாம். இவற்றை ஒன்றாய் உறழ, உள்ளம் எவ்வழி அவ்வழி மக்கள், அவ்வழி அரசு என்ற உண்மை துலங்கும். ஆகவே, உள்ளத்தின் தன்னாட்சி, நற்பண்பிலிருந்தே சமுதாயம், அரசியல் ஆகியவற்றின் தன்னாட்சி, பண்பு, ஒழுங்கு ஆகியவை பிறக்கின்றன என்பதைக் காணலாம்.
வாழ்க்கை என்பது ஒரு தறி. அதன் பாவு நூல்கள் நம் உணர்ச்சிகள். நூல்கள் நிரல்படத் தறியில் பற்றியிழுத்துக் கட்டப்பட்டாலன்றி அவற்றைப் பாவுநூல் என்று கூற முடியாது. நம் உணர்ச்சிகள் நிலையானவையாயிராமல், வந்த வந்த நேரத்தில் வந்து, சென்ற சென்ற போக்கில் சென்றால், அது சிக்கல் வாய்ந்த இழைபோல வாழ்வில் பொருந்தாதனவாகும். காற்றடித்த