உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

177

திசையெல்லாம் இழைகள் சென்றோடிச் சிக்குறாமல் அவற்றை ஓடு கருவிகளில் ஓட்டி ஒரு நிலைப்படுத்தி நிலையான படிவங் களாக்க வேண்டும்.உணர்ச்சியலைகள் ஒழுங்குபட்டபின்,நான் விரும்பும் ஆடையின் படிவத்துக்கேற்ப, அறிவு என்னும் ஊடு ல்களை இழையோட விடவேண்டும். சரிகை ஆடை வேண்டுபவன் திட்டப்படி வேண்டிய இடத்தில், வேண்டிய அளவில், வேண்டிய முறையில் பொன்நூலை இழைய விடவேண்டும். அதுபோல நாடிய இன்பக் குறிக்கோளை நாடியவகையில் வாழ்க்கையில் இன்ப எண்ணங்களாக ஓடச்செய்க. உறுதியான இழை, நயமான இழை, பல்வண்ண இழை திட்டப்படி ஓடவிடப்படுவதுபோல, அமைதி, உறுதி, அன்பு முதலிய நற்பண்புகள் சார்ந்த எண்ணங்களை இழை யோட விடு. கோபம், பொறாமை, ஐயுறவு முதலிய தீய எண்ணங்கள் நூலின் தூசுதுரிசாகவும், முடிச்சுகள் சிக்கல் களாகவும் அமையாமல், நுண்ணறிவு என்ற கைவிரலாலும், அனுபவமென்ற மென்கருவியாலும் சமனுறுத்தி இழைகாத்துப் பேணு. இம்முறையால் உன் குறிக்கோள் வாழ்வாகிய ஆடை வாழ்க்கைத் தறியிலிருந்து வெளிவரும்.

வளர்ப்புத்

ஆற்றலின் பிறப்பிடம், அறிவின் தொட்டில் அமைதி, மோனம்! அதை நிலையாகவே பேணுக. வேண்டும் போதே பயன்படுத்துக. வாழ்க்கையின் மாறா வழிகாட்டி அதுவே. துன்பமும் அமைதி குலைவும் நேரும் சமயங்களில் மோனத்தை நாடு. அதன்மூலம் அமைதி கைகூடும். அறிவுநடமாடும். ஆற்றல் பெருகும். அதேசமயம் நிலையான அமைதி மற்றெல்லாப் பண்களையும் வளர்க்கும். தன்னியல்பான இயற்கையுணர்வு' என்பது இம் மோன ஆற்றலையே."பேசுவது வெள்ளிபெறுமானால், பேசாமை பொன்பெறும்” என்று கூறுவது இதனாலேயே. பேசாமை அதாவது பேச்சிடையே ஓய்வு பேச்சுத்திட்பத்தை வளர்ப்பது போல, எண்ணம் ஓய்வுபெற்ற நிலையாகிய மோனம் எண்ணங்களின் திட்பத்தை உண்டு பண்ணுவதுடன், அவற்றில் நிலையான அமைதியும் ஒழுங்கும் பேணி வளர்க்கும். நிலையான மோனம் இங்ஙனம் உணவு சமைப்பதில் ஈடுபடுத்தப்படும் நீர்போலவும், தற்காலிகமோனம் உணவில் முன்னும் பின்னும் இடையேயுள்ள உட்கொள்ளும் நீர் போலவும் பயன்படுகின்றது.