உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

187

தேக்கமுள்ள வீட்டையோ, தொற்றுநோய்ப் பிடிப்புள்ள வீட்டையோ தெரிந்தெடுத்தாலும் கூடத் தெரிந்தெடுப்பான். இத்தகைய பண்புகளுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க

மாட்டான்.

உளப்பண்புக்கும் உடல்நிலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகள் பல ஒருவன் பெரும்பீழை தரும் ஒரு நோய்க்கு ஆளாயிருந்தான். ஒருவர்பின் ஒருவராகப் பல மருத்துவரிடம் மருந்துதவி பெற்றான். ஒன்றும் பயன்பட வில்லை. மருந்து நீரூற்றுகளுக்குச் சென்று குளித்தாடி இருந்து பார்த்தான். நோய் பெருக்கமுற்றதே தவிரக் குணநலம் பெறவில்லை.

ஓரிரவு கனவில் ஒரு தெய்விக வடிவம் அவன்முன் தோன்றிற்று. “எல்லாவகை மருத்துவமும் பார்த்துவிட்டாயா?” என்று அது கேட்டது. "ஆம்" என்றான். “எல்லாம் பார்த்திருக்க மாட்டாய். இதோ என்னுடன் வா, நீ கவனியாத ஒருமுறை காட்டுகிறேன்" என்று கூறி வடிவம் அவனை அழைத்துச் சென்றது. ஒருபடிகநிற நீராழியைக் காட்டி, "இதில் முழுகு" என்று கூறி அது மறைந்தது. நீராழியின் படிக்கட்டிலுள்ள அறிவிப்புப் பலகையில் “தன் மறுப்பு' என்ற எழுத்துப் பொறித்திருந்தது. அவன் அதில் மூழ்கியதும் நோய் நீங்கியதாகக் கனவு கண்டான்.

விழித்தெழுந்ததும் நீராழி, நீராழியல்ல; தன்மறுப்பின் அறிகுறியே என்று று கண்டுகொண்டான். அவன் தன் வாழ்வின் பழக்கங்களை, தன் உள்ளத்தைத் துருவித் தேடினான். தகா எண்ணம் ஒன்றும் அது சார்ந்த பழக்க மொன்றும் தன்னிடம் ஊன்றியிருப்பதாகக் கண்டான். அரும்பாடுபட்டுப் பழக்கத்தை நீக்கியபோதே, பாதிக்கு மேல் குணங்கண்டது. எண்ணங்களை அடக்கியதே, நோய் இருந்த தடம் தெரியாமல் அகன்றது.

மிகுதி உழைப்பால் நாங்கள் நாங்கள் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டோம் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் பெரும்பான்மையாக மிகுதி உழைப்பினால் ஏற்படும் தொல்லையைவிட வீணுழைப்பு, அமைதியற்ற படபடப்பு