உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

அப்பாத்துரையம் - 43

ஆகியவற்றால் ஏற்படும் தீங்கே மிகுதியாயிருக்கும். படபடப்பினால் வேலைக்குத் தேவையான அளவுக்குமேல் உழைப்பவர் உழைப்புக் கருதி உழைக்கவில்லை. தாம் உழைப்பதாகக் காட்டிக் கொள்ளவோ, தன் மனத்தில் உழைப்பில் பற்றில்லாமையை மறைக்கவோதான் அப்படிச் செய்கின்றனர். தவிர, பேரவாவால் உடலாற்றல் மீறி உழைக்கவோ, திறமை வளர்ப்பதாகத் தவறான எண்ணங்கொண்டு வேலையின் நுட்பங்களில் மட்டுமீறிக் கருத்துச் செலுத்தவோ செய்வதனால், உடல் கெடுவதுடன் அதற்கு அடிப்படையான உளநலமும் கெடுகின்றது. உழைப்பில் அமைதியும் ஓய்வும் உளநலத்துக்கும் உடல்நலத்துக்கும் இன்றியமையாதது. கவலையும் நச்சரிப்பும் இரண்டையும் கெடுக்கும். இவற்றால் வேலையின் தரமும் அளவும்கூடக் குறையும். திட்டமிட்ட அளந்தவேலை ஒருவனைத் திறமையுடைய நல்ல உழைப்பாளி ஆக்குவதுடன் உளநலம், அறிவுநலம், உடல் நலம் ஆகியவற்றையும் வளப்படுத்துகிறது.

உண்மையான உடல்நலமும் செயல் வெற்றியும் ஒன்றைவிட்டு ஒன்று அகலாத பிணைப்புற்ற உளப் பண்பினாலானவை. ஏனெனில் இரண்டும் மனஅமைதியின் பயன்களே. ஒருபுறம் மன அமைதி உடல் நலத்தை உண்டு பண்ணுகிறது. மறுபுறம் அது உழைப்பினைத் திட்டப்படுத்தி நிறைவேற்றுகிறது. அத்துடன் மன அமைதி எண்ணங்களை ஒழுங்குபடுத்தி அவற்றுக்கு உருவும் வடிவும் உண்டு பண்ணு கிறது. அதனால் வாழ்க்கை திட்ட அமைதிப்படுகிறது.உணர்ச்சிக் குமுறல்களின் மீதும் தப்பெண்ணங்களின் மீதும் அது தன் ஆற்றலைப் படியவைத்து வாழ்வின் இன்னல்களைத் தடுக்கிறது.

வ வாழ்வு என்னும் கடலில் உயிர் என்னும் கலம் ஏது மில்லாமல் பயண முற்றுவித்து வெற்றியடைய அமைதியும் பற்றுறுதியும் பெரிதும் உதவுகின்றன. அமைதிக்கடலின் புயலை அமைத்து அது கலஞ் செல்லும் வழியை எளிதாக்குகிறது.

ன்னலமிக்க தளராத பற்றுறுதி கலத்தை ஓட்டும் மீகாமனா யிருந்து வழிகாட்டிப் பயணத்தைப் பின்னும் இனிது நிறைவேற்றுகிறது. எல்லாக் காரியங்களிலும் வெற்றிக்கு முதலாகும் சீரிய பண்பு பற்றுதியே. மீயுயர் பொருளாகிய