திருநிறை ஆற்றல்
189
தெய்வத்தினிடத்தில் பற்றார்வம் இயற்கையின் உயர் அமைதியில் பற்றார்வம், உங்கள் பணியில் பற்றார்வம், பணியை முறக்கும் ஆற்றலில் பற்றார்வம் எனப் பற்றார்வம் வாழ்க்கையின் கொந்தளிப்பிடையே எங்கும் துணையாகவும், எல்லாவற்றுக்கும் அடிப்படையான சலியாத கருங்கற் பாறையாகவும் நிலவுகின்றது.
ய
உன் அகத்துள்ள உயர் குரலுக்கு எப்போதும் செவி கொடுத்து அதைப் பின்பற்று, தெய்விக ஆற்றல் உடைய ஆன்மாவிடம் உண்மை தவறாதிரு; உள்ளொளி, உள்ளக் குரலில் பற்றுறுதி கொள்; உன் ஒவ்வோர் எண்ணத்தின் பயனும், ஒவ்வொரு முயற்சியின் விளைவும் வருங்காலத்தில் உன்னை வந்து எய்தும் என் உறுதியாக நம்பு. இவை இயற்கையின் அமைதி. இரண்டும் இரண்டும் நான்கு என்ற முடிவு எப்படி பிழைக்காதோ, அப்படியே இவை தவறமாட்டா.
இயற்கையின் இவ்வமைதியில் பற்றுறுதியும் திட்ட மான நம்பிக்கையும் கொள். ஏனெனில் இத்தகைய பற்று ஓர் உயிர்ப்பண்பு ஆகும். அதை உடையவன் செயலைச் செய்வான்; விளைவு பற்றிக் கவலைப்பட மாட்டான். அவன் வெற்றியில் மகிழமாட்டான்; தோல்வியில் வருந்தமாட்டான். முயற்சியைச் சரிவர முற்றுவிப்பதுடன், அவன் மனம் நிறை வடைந்துவிடும்.
ஊசிவழி நூல் செல்வது எவ்வளவு இயல்போ, அவ்வளவு இயல்பாக, வெற்றி அதற்குரிய முயற்சியைத் தொடரு மென்பதை அவன் அறிவான். வெற்றி வெளிப் படையாகத் தெரிந்தாலும் அவன் கவலை கொள்ள மாட்டான்.வெற்றியில் மகிழவும் மாட்டான்; ஏனெனில் வெற்றியினளவு முயற்சியின் அளவையும் முயற்சியின் அளவு வெற்றிக்குமுன் ஏற்படும் தடைகளின் அளவையும் மட்டுமே பொறுத்தது. முயற்சி கடுமையும் நீட்டிப்பும் அடையுந்தோறும், பயனும் அந்த அளவுக்கு அருஞ்சிறப்புடையதாகிறது.
பற்றுறுதி மிக்கவன் அவா ஆர்வமுடையவனா யிருப்பதனால் இடையூறுகள் அவனை விட்டகலுகின்றன. ஐயமென்னும் அழுக்குப்பாசி, அவா ஆர்வத்தின் மூச்சுப்பட்டதே விலகிக் கொள்கிறது. அதன் கதிரொளியின் முன், இடையூறு