உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(190) ||__

றன.

அப்பாத்துரையம் - 43 களென்னும் பனிமலைகள் தாமாக உருகி அழிகின் பற்றுறுதி இத்தடைகளை ஊடறுத்து வழிவகுக்கின்றது. விலைமதிப்பற்ற கருந்தனமாகிய இப்பற்றுறுதியை ஒருவன் எப்பாடுபட்டும் பெறத்தகும். இன்பம், வெற்றி, அமைதி, ஆற்றல் ஆகியவை அடங்கிய பேழையின் திறவுகோல் அதுவே. துன்பந்தாண்டி வாழ்வில் பெருமையடைய மிகச் சிறந்த நூலேணியாக அது பயன்படுகிறது.

உலகியல் செல்வங்கள், இன்பங்கள் மீது உன் வாழ்வை எழுப்பாதே. அவை மணல் பரப்புக்கள். அவற்றின்மீது கட்டமைக்கப்பட்ட கட்டடம் எவ்வளவு உறுதியாயிருந்தாலும் பயனில்லை. நிலத்தளத்தின் நொய்ம்மையால், கட்டடம் சரிந்துவிடும். பற்றுறுதி என்கிற கடும்பாறை மீது வாழ்க்கைக் கட்டடத்தை எழுப்பு. காலங்கடந்த நிலையான மெய்ம்மையுடன் பிணைக்கப்பட்ட அப்பற்றுறுதி உனக்குப் பற்றுறுதியின் வலுவுடன் அந்நிலையான மெய்ம்மையின் வலுவையும் அளிக்கும்.

பற்றுறுதி வாழ்வுக் கட்டடத்தின் அடித்தளமட்டு மன்று. கட்டடத்திற்கான செங்கல்லும் மண்ணும் அந் நிலத்தின் திண்மையின் செல்வமாகவே இருக்கும். ஆகவே உன்வாழ்வு நிலையான மெய்ம்மைமீது நிலையான மெய்ம்மை கொண்டு கட்டமைந்ததாய், மாறா உறுதியுடையதாய் இருக்கும். மகிழ்ச்சியின் அலை முகட்டில் நீ மிதந்துயர்ந்த போதிலும், துன்பத்தின் ஆழ்கசத்தில் நீ தள்ளப்பட்ட போதிலும், பற்றுறுதியாகிய இப்புணையை நீ பற்றியிருக்குமட்டும், நீ அதன் துணை நீங்காது அதன் நடுநிலை நெறிக்கு வந்து சேர்வது உறுதி. பெரும் பாறையுடன் இணைக்கப்பட்டுள்ள சிறு பாறையும் பெரும் பாறையின் உறுதியுடையதாகி, தான் நொறுங்காமல் அதைத் தன்மீது நொறுங்க விடுவதுபோல, நிலையான மெய்ம்மைமீது பற்றிக்கொண்ட உன் பற்றுறுதி தீமையின் ஆற்றல்கள் முழுவதையும் தன் மீது ஏற்று நொறுங்கச் செய்யும்.

66

‘ஐயுறவுகளால் அசைக்க முடியாத பற்றுறுதி கொள்க. அதன்பின் உன் ஆணைமீது, மலைகள் நகரும். மலைகளின் உதவியால் கடல்கள் தூர்படும். இவ்வரும் பண்பு கைவரப் பெற்று அதனைக் கடுந்தேர்வுகளால் கெட்டிமைப்படுத்தியவர்கள்