192
அப்பாத்துரையம் - 43
இந்நங்கையின் எழில்வாழ்வு எழில்வாழ்வு எல்லா நங்கையரின் வாழ்வாகவும், எல்லா நம்பியரின் வாழ்வாகவும், உன் வாழ்வாகவும் ஆகத் தடை எதுவும் கிடையாது. தான் இருந்து வாழும் இல்லத்தைதானே தூக்கிச் செல்லும் நத்தையினம் போல, உன் வாழ்வை, வாழ்வின் வெற்றி தோல்வி வித்துக்களை, உன் செல்வங்களை, செல்வாக்கை நீயே சுமந்து செல்கின்றாய்.உன் உள்ளத்தை விரிவுபடுத்தி அதில் பொதுநலம் என்னும் வெள்ளத்தைப் பெருக விட்டால், அதில் அன்புக் கனிவுள்ள, தூய இன்பகரமான கருத்தலைகளை இயங்க விட்டால், உன் வாழ்விலும் சூழலிலும் எல்லா நலங்களும் வந்து தவழும். உன் உள்ளத்தைக் குறுகலாக்கித் தன்னலத் தால் சுருங்க வைத்தால், மாசடைந்த வெறுப்புணர்ச்சிகளையும் துன்பகரமான கருத்தலைகளையும் இயங்கவிட்டால், எல்லா வகைப் பழிகேடுகளும் உன் வாழ்விலும் சூழலிலும் வந்து மொய்க்கத் தவறமாட்டா கோடி குவித்த செல்வம் தரும் பெருமையையும் செல்வாக்கையும்விட, விரிந்த உள்ளத்தின் நற்கருத்தலைகள் உனக்களிக்கும் பெருமையும் செல்வாக்கும் எப்போதும் மிகுதியாகவே இருக்கும்.
தன்னலமற்ற இத்தகைய தூய உள்ளத்தை அன்பு என்னும் ஏரால் உழுது பண்படுத்து. பற்றுறுதி, ஒருமுகச் சிந்தனை ஆகியவற்றை உரமாகச் செறிய வை. நோக்கங்களாகிய நல்ல விதைகளை விதை. அதன்பின் உன்வேளாண்மை இயற்கை யின் வேளாண்மையாகத் தானே இயலும்.
ஒருவேளை உன் தற்கால நிலைமை உனக்குப் பிடிக் காதாயிருக்கலாம். உன் வேலையில் உன் மனம் பற்றாதிருக்கலாம். ஆனால் அந்த நிலையிலும் உன் கடமைகளில் தவறு வரவிடாதே. உன்நிலை மேம்படுவது உறுதி என்றும், உன் வாய்ப்புக்கள் பெருகும் என்றும் உன் உள்ளத்தை நம்பவைத்துக் கடமையில் அதை ஈடுபடுத்து அதே சமயம் உன் அகக் கண்களைத் திறந்து விழிப்புடன் இருக்கவைத்து அத்தகைய வாய்ப்புக்கள், நிலைகள் ஆகியவற்றை எதிர்நோக்கும்படி செய். உன் கடமையாற்றி இப்போதைய உன் நிலை, உன் வாய்ப்புக்கள் ஆகியவற்றைக் கெடுக்காமலே, உன் அகக் கண்கள் உன் வருங்காலத்துக்கும் குறைவற உழைப்பதைக் காண்பாய். புதிய