உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் – 43

200 || நிறைவுணர்ச்சியே தம் வாழ்க்கையிலுள்ள எல்லா இன்பங் களையும் போக்கடித்து விட்டதென்றும், ஏழைகளாயிருந்த போது தாம் கண்ட இன்பத்தைத் தாம் மீண்டும் எப்போதும் கண்டதில்லை என்றும் மனமுருகி ஒத்துக் கொண்டுள்ளனர்.

அப்படியானால், இன்பம் என்பதன் இயல்புதான் என்ன? அது கணக்கு வழக்கில்லாமல் தானாக எப்போதோ வரும் ஒன்றா, அல்லது அதை அடைவதற்கான திட்டவட்டமான வழிதுறைகள் உண்டா? இன்பம் தற்காலிகமான ஒரு மாயத் தோற்றம், துன்பமே என்றும் நிலையானது என்று கூறலாமா?

மெய்யறிவின் எல்லைக் கோட்டைக் கடந்த ஒரு சிலர் தவிர மற்ற எல்லாருமே இன்பத்தை அவா நிறைவால் ஏற்படும் உணர்ச்சி என்றுதான் கொள்ளுகிறார்கள். இது பொதுவாக அறியாமையாகிய நிலத்தில் விளையும் களை போன்ற ஒரு தவறான குருட்டு நம்பிக்கையே யாகும். தன்னல இச்சைக்கள் இக் களைப்பயிரை வளர்க்கின்றன. உலகத்திலுள்ள எல்லாத் துன்பங்களுக்கும் இந்நம்பிக்கையே மூல காரணம் என்னலாம்.

மேலும் இங்கே அவா என்று நாம் கூறியது கீழ்த்தர விலங்கவாக்களை மட்டுமல்ல. உயர்தர உள அவாக்கள் கூடத் தன்மையில் அவற்றைப் போன்றவைதான். முந்தியவை கீழ்த்தர அவாக்களானால், அவை கீழ்த்தர உள்ளங்களையே அடிமைப் படுத்துகின்றன. பிந்தியவையோ, உயர்தர அவாக்களானாலும், அறிவுத் திறமும் நயநாகரிகமும் உடைய உயர்தர உள்ளங் களையும் மெல்ல வசப்படுத்தி அடிமையாக்கும் நுண்திறம் உடையவையாயிருக்கின்றன. இன்பத்துக்கு அடிப்படையான அழகு, இணக்க அமைதி, தூய்மை ஆகிய தாயகப் பண்புகளை அவை அரித்துத் தின்று விடுகின்றன.

உலகில்

துன்பங்களுக்கெல்லாம் க்கெல்லாம் தன்னலமே காரணம் என்பதை எல்லாருமே எளிதாக அட்டியில்லாமல் ஒத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தன்னலமென்று கூறும்போது தம்மைத் தவிர மற்றவர்களின் தன்னலத்தை மட்டுமே எண்ணிக் கொள்வார்கள். இது ஒரு ஆன்ம வஞ்சகம். ஒரு நச்சுத் தற்கொலைப் பண்பு. அவரவர் துன்பம் அவரவர் தன்னலத்தின் பயன்தான் என்பதை ஒருவன் ஒத்துக் கொள்ளத்