திருநிறை ஆற்றல்
(201
தொடங்கினால், அவன் தெய்விக உலகின் வாயிலை எட்டி விட்டான் என்று கூறலாம். அது வேறு எவரது தன்னலமோ என்று கருதுமளவும், அவன் பழியுலகத்தின் சிறைக்கோட்டத் துக்குள் அடைப்பட்டே கிடக்கவேண்டும்.
இன்பம் என்பது உண்மையில் உள்ளத்தின் அகத்தே உள்ள ஒரு முழுநிறை அமைதியேயாகும். அவாக்கள் என்னும் அலைகள் ஓய்ந்த பின் இவ்வமைதி உண்டாகிறது. அவாக்களின் நிறைவேற்றம் தரும் இன்பம் தற்காலிகமானது. அது துன்ப மாகவும் மேலும் அவாவைத் தூண்டுவதாகவும் அமைகிறது. அவாக்களை ஒருவன் நிறைவுபடுத்தக் கருதுந்தோறும் அவை அலையாகத் தோன்றுகின்றன. அவற்றின் அரவம் கடலின் அரவம்போல எல்லையற்றதாய்க் குமுறி எழுகின்றது. அதன் மாய மருட்சிக்கு ஆட்பட்ட உள்ளத்தை அது முழுதும் ஆட்படுத்தி ஆண்டு, அம்மனத்தின் முழு ஆற்றலையும் உழைப்பையும் அது தனக்கே திறையாகக் கொண்டுவிடுகிறது. உடலாற்றல், உள ஆற்றல் முழுவதும் தளர்ந்த பின், அவாக்கள் மனிதனைத் துன்பம் என்னும் தீயில் தள்ளுகின்றன. அவாவைச் சுட்டெரிக்க இத் தீ பயன்படுத்தப் பட்டாலன்றி, அதுவே வாவுடையவனுக்கு அல்லல் படுத்தும் அளறு ஆகும். அவாக்களை இயக்க அல்லது அறுக்க இத்தீயைப் பயன்படுத்தினால், வாழ்க்கை வழிப்போக்கன் விரைவில் இன்ப உலகை அடைகிறான்.
காணாத இன்ப உலகு எங்கே என்றும்,
கரையிலாத் துன்ப உலகு இயல்பு எது என்றும், காணுதற்காய்க் காட்சியினுக் கப்பால் என்றன், கருத்தினை யான் அனுப்பினேன், மீட்டுவந்து, காண்க, நீ கருதும் இன்ப உலகும், துன்ப
66
உலகும் நான்” என்று கட்டுரைத்தன்றே!
இன்ப உலகும் துன்ப உலகும் வேறெங்கும் இல்லை. நம் உள்ளத்தில் அகநிலையின் உள்ளேயே இருக்கின்றன. தற்பற்றிலும் அவாநிறைவிலும் ஈடுபட்டு ஆழ்பவன் நரகில் உழல்கிறான். தற்பற்றொழித்து அது கடந்த மேல்புலத்திற்கு ஒருவன் எழுவானானால், அவன் வானுலகில் தவழ்பவன் ஆகிறான். தற்பற்றுத் தானும் குருடாய், உள்ளத்தையும்