உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(202

அப்பாத்துரையம் – 43

குருடாக்கிக் குருட்டுப் பாதை வழியே நம்மை இருளுக்குக் கொண்டு செல்கின்றது. அது மெய்யறிவுத் துணிபற்றது;என்றும் துன்பமே தருவது. சரியான காட்சியுணர்வு, சார்பிலா நடுநிலையுணர்வு, உண்மை அறிவு ஆகிய மூன்றும் அவா அடங்கிய அமைதியுடைய இடத்திலேயே தோன்றும். அதுவே இன்பந் தரும்.

தற்பற்று மாய இன்பங்களை நாடித் துன்பங்களையே வரவழைக்கும். தற்பற்றற்றதன்மை துன்பங்களை எதிர்த்து மடக்கி நிலையான இன்பத்தை உண்டுபண்ணும். தற்பற்றுப் பிறரிடம் தற்பற்றுக்கண்டு கண்டித்துத் தன் தற்பற்றை வளர்ப்பதனால், பிறர் தற்பற்றையும் தூண்டி வளர்த்து அல்லற்படும். தன்மறுப்புத் தற்பற்றொழித்துப் பிறர் தற்பற்றையும் மாற்றியமைத்து எல்லையில்லா நிறை பயன் உடைய இன்பச்சூழலை உருவாக்கும்.

அன்பு, பெறுபவனை மகிழ்விக்கும், ஆனால் பெறு பவன் அடையும் மகிழ்வு கொடுப்பவன் உளநிறைவுக்கு ஈடாகாது. பெறுபவன் மகிழ்வு கொடுப்பவன் காட்டிய அன்பின் அளவு. கொடுப்பவன் மகிழ்வின் அளவு எல்லையற்றது.

கொடையினில் கொடுப்போன் உள்ளம் கொடைபெறு பவனு ளத்தில்

எடையினிற் பெரிதாம் சால;

எண்ணிய அன்பின் பீடும்

தடையிலாது அன்ன தேயாம்;

தனக்கிலாது ஈந்தவெல்லாம் கொடுப்பவன் உள்ளத்துள்ளே

குன்றெனக் குணத்தின் ஓங்கும்!

பசி பெரிதென்று உணவின் அவாவை வளர்ப்பவன் உணவை மட்டின்றிப் புசிக்கிறான். அதனால் பசி மட்டும் போகிறது. பசியின் சுவையும் போகிறது. பசியின் அவா மட்டுமே மீந்து நிற்கின்றது. அவாவும் அவாவை நிறைவேற்ற அவன் முன்பு அலைந்து தேடிய உணவும் இருக்கின்றன. அவாவை நிறைவேற்று வதற்குரிய பசிச்சுவையும் செரிமானமும் கெட்டுவிடுகின்றன. உணவு நோயைத் தருகிறது. நோய் புதுத்துன்பங்களையும் கவலைகளையும் தருகிறது. சாவச்சத்தைப் பெருக்குகிறது.