உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

(205

இக்கீறல்களைத் தடுத்துப் பேரின்ப சை அலைகளை எழுப்புகின்றன.

ஆடவரும் பெண்டிரும் இன்பத்தை நாடி எங்கெல் லாமோ கண்ணைமூடிக் கொண்டு அலைந்து அல்லற் படுகின்றனர். ஆனால் அது அண்டமெங்கும் உள்ளது. தம்மைச் சூழ உள்ளது - சிறப்பாகத் தம்முன்னே இருக்கிறது என்பதை உணர்வது வரை அவர்கள் அதைக் காணப் போவதில்லை. தன்னலமாகிய சிறுசிறைக்கூடத்தில் நம்மை அடைத்து வைத்துக் கொண்டு நாம்தான் அதை உள்ளே புக விடாமலிருக்கிறோம் என்பதை அவர்கள் அறிவதில்லை.

படர்ஆல மரமேறி, படர்கொடிகள் தாவி,

பாவை இன்பச் செவியை நான் பற்றிவிட விரைந்தேன்; விடர்தாண்டி, மலை ஏறி இறங்கி, அவள்மாய வெளியுருவைப் பின்தொடர்ந்து வேடனெனச் சென்றேன்; இடர்தரு கானாற்றிடையே நீந்தினேன், கழுகுக்கு எட்டாதகொடும்பாறை எட்டி எட்டி அலுத்தேன்! கடலகமும் வானகமும் ஓடி என்றன் நாட்டம் கடந்தகன்று கண்மறைந்தாள் கருத்திழந்து நின்றேன். இளைத்த உடல் துவள, கால்மடங்க, கண்சோர்ந்தே இருந்திட்டேன் பாலைவனத்திடையே! ஆங்கு ஓர்நாள், களைத்தொருவன் பிழைத்த என்றன் கை உதவிநாட கையுணவும் கருத்தன்பும் கலந்தவனுக்கு அளிப்ப; துளைத்த துயர் அரிப்பவந்த துணைஒருவர்க் காங்கே துணைதரு நன்மொழிபுகன்று துயர் தேற்றிநிற்ப, முளைத்தங்கு வந்தவள்போல் வந்துநின்றாள், ‘உன்றன் குறிப்பறியும் கொள்கை யிளங்கோடி இதோ' என்றே!

தற்காலிகமான இன்பத்தையும் தனிப்பட்ட குறுகிய தனி மனித எல்லையிலுள்ள இன்பத்தையும் துறந்துவிடு; உலகெலாம் இன்பமுறுவித்து அதனுடன் உனக்கும் நிலையான இன்பந் தரும் பேரின்பம் உன்னிடம்தானே வந்தெய்தும். இதுவே பொங்குந்தன்மையுடைய பீடுமிக்க இன்பத்தின் மறைதிறவு கோல். பொது நலமாகிய வானிலேதான் துயர் என்னும் நிழலாடாத உயர் இன்பங்களாகிய வானணங்குகள் நடமாடுவர்.