(204
அப்பாத்துரையம் - 43
மாட்டான். கீழ்த்தர அவாக்கள் நிலையில்லாதவை. ஆதலால், அவற்றைப் பற்றுபவன் நிலை, மிதந்துசெல்லும் கட்டையைப் பற்றிக்கொள்பவன் நிலையேயாகும். மாறாத மெய்யின்பத்தை நாடுபவர் நிலையில்லாத மாறுபடும் கீழ்த்தர இன்பங்களைக் கடந்து மாறாத உயர்பண்பமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.உளத்தூய்மை, தன்மறுப்பு, வரையறையில்லா விரிந்த அன்பு அல்லது அருளாண்மை ஆகியவை இத்தகைய அமைதி நிலையை எய்துவிக்கும். நிலையற்ற மற்ற இன்பங்களுக்கெல்லாம் திரீடு ஆன துன்பங்கள் உண்டு. மணிப்பொறியின் ஊசல் குண்டுபோல மனிதன் அப்போலி இன்பங்களிலிருந்து துன்பத்துக்கும், துன்பத்திலிருந்து புதிய போலி இன்பங்களுக்கும்
டையே அல்லாடுவான். அமைதியின்பம் இவ்வின்பங்கள் போன்றதன்று.இன்பங்களுள் இந்த ஒரு இன்பத்துக்கு மட்டுமே எதிர்நிலையான துன்பம் கிடையாது.
தன்னை மறுத்து, கிட்டத்தட்டத் தன்னை மறந்து, அமைதி பெற்ற நிலை துன்ப நீங்கிய இன்பநிலை மட்டு மன்று, அதுவே அழிவில்லாத் தெய்விக நிலை, அதுவே பேரின்பம்.இந்நிலையடைந்தவர் சிறு இன்பங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை இராது. ஆனால் வாழ்வின் தன்மை காண அவர்கள் திரும்பி நோக்கினால், தம் பழைய செயல் களிடையே சில மின்மினிகளாகச் சுடரிடுவதைக் காண்பர். அவையே அவர்கள் இரக்கச் செயல்கள், தன்மறுப்புச் செயல்கள்! வரவிருக்கும் இன்பத் தேனாரமுதத்தின் முனிமுகமான சிறு துளிகளாக அவை விளங்குகின்றன.
ஆன்மநிலையில் இன்பம் என்பதும் இயைபமைதி என்பதும் ஒருபொருட் சொற்களே. உயிரின் இயைபமைதி என்பது இயற்கையின் பேரமைதியின் ஒருகூறே. இயற்கையின் பேரமைதியின் ஆன்மிகநிழலே அருள் அல்லது நிறைந்த அன்பு. இவ்இயைபமைதியைப் பேணும் அன்புநலத்தையே நாம் பொதுநலம் என்கிறோம். உயிர்வாழ்வின் வீணைநாதமாக இயங்கும் இவ் வியைபமைதியைக் கெடுக்கும் கீறலாகத் தன்னலமும் தற்பற்றும் விளங்குகின்றன. ஆன்மிக வீணை யினின்று எழும் தெய்வீக இசையில், இவை முரண் ஓசைகள் உண்டுபண்ணிக் கெடுக்கின்றன. பொதுநலமும் விரிந்த அன்பும்