உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(222

அப்பாத்துரையம் - 43

உள்ளத்தின் உள்ளார்ந்த உள்ளமே மெய்ம்மையின் அள்ளிக் கொளும் பேரழகுருவம் - உள்ளச்

சிறையில் அதையடைத் தாருயிர் என்றே மறையப் புறஞ்சூழ் மதில்கள் எழுப்பி தசைபொதி யாம் அஃது உடலெனச் சாற்றி நசையில் உணர்விழப்பர் நாடி - அசைவிலா அவ்வொளியின் வாயில் அடைத்தே இருளின்கண் எவ்வமடைந் தின்னாமை எய்துவர் - செவ்விதின் நேரார், அறிவை அறிதா நேர்வழி

காரார் இருளின் கதவுதிறந்-தேரார் ஒளிபுறஞ் செல்லவிடுதல் - வெளியிருந்து ஏக விடலன் றென.

நாள்தோறும் சிந்தனைக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை நீ விட்டு வைப்பாயாக. அதை உனக்குரிய திருநிறை நேரமாகக் கருதிப் பேணுக. அந்நேரம் புலர்காலை நேரமாயிருந்தால் மிக நன்று. ஏனென்றால் அதுவே இயற்கையின் ஓய்ந்த அமைதி நேரம். இயற்கையின் இயல் பான சூழல் அமைதி உன் சார்பாக முழுதும் அமைந்திருக்கும் நேரம் அதுவே. இரவின் நிறை துயிலால் உன்னிடம் இயல்பாய் நிலவும் விசை யுணர்ச்சிகள்கூட அச்சமயம் ஓய்ந்து அமைந்து கிடக்கும். முந்தின நாளைக்குரிய கிளர்ச்சிகளும் கவலைகளும் அத்துயிலின்போது உன் உள்ளத்திலிருந்து தற்காலிகமாவது விடைகொண்டேகி, அதனை அலைக்கழிக்காது விட்டிருக்கும். இத்தகைய நேரத்தில்தான் உள்ளம் உன் விருப்பத்துக்கேற்பப் புதுப் பண்பை விரும்பி ஏற்கத் தக்கதாயிருக்கும். மேலும் இவ்வேளையே ஓய்வின் நேர்மை எல்லை. ஓய்வு இது கடந்து நிலவினால் அது சோம்பலாய் விடும். உன் சிந்தனை ஓய்வை நீடிக்க விடாமல் அதை முயற்சியில் செலுத்தும். அத் துடன் அம்முயற்சி தொடங்கு முன்னேயும் எளிதில் உருவாக்கும். ஓய்வின் முடிவில் சிந்தனையில் கூட முனைசிந்தனையும் முயற்சியும் இல்லாதவன் வாழ்வு சீர்படாது. ஏனெனில் ஓய்வின் பின் உழையாது சோம்பியிராதே என்பது இயற்கையின் விலக்க முடியாக் கட்டளை. அதை மீறினால் அவன் இயற்கையின் கடுந்தண்டனைக்கு ஆளாவது உறுதி.