(234) ||.
அப்பாத்துரையம் - 43
போதகராகிய புத்தர் பிரான். அருளாளவந்த இயேசு பெருமானோ, "எந்த மனிதனும் இரு தலைவர்களுக்கு ஆட்பட்டிருக்க முடியாது. அவர்களுள் ஒருவரிடம் நேசங்கொண்டால், மற்றவரை மனமார வெறுத்தாக வேண்டும். அல்லது மற்றவரைப் பற்றிக்கொண்டு முன்னவரை இழித்தாகவேண்டும். 'திரு' மகனையும் இறைவனையும் ஒருவரே ஒரேமூச்சில் வணங்கிப் பின்பற்ற முடியாது. கட்டுரைத்தார்.
""
என்
று
வாய்மை என்பது எளிமை வாய்ந்தது. வளைவு நெளி வின்றி நேரடியானது. எத்தகைய உறழ்ச்சி பிறழ்ச்சிகளுக்கும் வகைதொகைச் சிக்கல்களுக்கும் இடம் தராதது. ஆனால், தன்முனைப்போ சூழ்ச்சித் திறம் வாய்ந்தது. பாம்பு போல் வளைந்து நெளிந்து பிறழும் நுண்ணியத் திறங்கள் உடையது. எல்லையற்ற எத்தனையோ மடிப்பு தொகுப்பு உறழ்வுகளுக்கு இடம்தருவது. மருள்வயப்பட்ட தன் முனைப்பின்
அடியார்கள் உலகியல் உலகியல் அவாக்கள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக்கொண்டே வாய்மையையும் இழவாதிருக்க லாம் என்னும் மாய இன்பப் பகற்கனவு காண்கின்றனர். ஆனால் வாய்மை, நெறியாளர்களோ வாய்மையின் பலிபீடத்தில் தங்கள் தன்முனைப்பையே பலியிட்டு வழிபாடாற்றுகின்றார்கள். உலகியல்பற்று, தன்னலவேட்டை ஆகியவற்றின் தொற்றுக் களிலிருந்து அவர்கள் விழிப்புடன் எப்போதும் தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றனர்.
வாய்மையை
உணர்ந்து அதை வாழ்க்கையிலே நிலைபேறுடைய ஒன் றாக்க க்க நீ விரும்புகிறாயா? அப்படியானால் நீ எப்போதும் எதையும் அதற்காகத் துறந்து விட ஒருங்கியிருத்தல் வேண்டும். ஏனெனில் தன்முனைப்பின் கடைசித் தடத்தின் சாயலும் அகன்ற பின்பே வாய்மையின் முழுநிறை செவ்வொளியை நீ கண்ணாரக் காணக்கூடும். நாள் தோறும் தன்னை மறுப்பவனே என்னை ஏற்கத் தக்கவனாவான்” என்று இயேசுபிரான் கூறியது இதனாலேயே ஆகும். உன் கீழ்த்தரப் புலன் சார்ந்த இன்ப அவாக்கள், உன் குருட்டுத் தப்பெண்ணங்கள், உன் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றை விட்டொழித்து விடு. அதன்பின்பே வாய்மை
66