உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

235

யென்னும் இடுங்கிய நேர்நெறியில் நீ நுழைந்து செல்ல முடியும். அதனுள் நீ காணும் அமைதியை உலகிலுள்ள எதுவும் உன்னுடன் வந்து பங்கு கொள்ளமுடியாது. தன் முனைப்பின் முழுமறுப்பு முழு ஒழிப்புத்தான் வாய்மையின் முழுநிறை படிவத்தை வெளிப்படுத்தும் என்று எல்லாச் சமயங்களும், எல்லா மெய்விளக்க முறைகளும் வலியுறுத்தியது இதனாலேயே.

தன்முனைப்பின் மறுப்பே வாய்மை. அதுபோல வாய்மையின் மறுப்பே தன்முனைப்பு. தன்னை இறக்க விட்டவன் வாய்மை ஒளியில் மீண்டும் புதிதாக மறுபிறப்படைகிறான். தான் வாழ எண்ணுகிறவனிடமிருந்து வாய்மை மறந்து உறைகிறது. ம்

தன்முனைப்பைப் பற்றிக் கொண்டிருக்கும் வரை மனிதனின் வாழ்க்கைப் பாதை பல இன்னல்களுக்கும் இடையூறுகளும் துன்பங்களும் நிறைந்ததாகிறது. மீட்டும் மீட்டும் கட்ட நட்டங்களும் கடுந்துயர்களும் மனக்கசப்புக்களும் அவனை வந்து தடுக்கின்றன. வாய்மைவழியைப் பின்பற்றி விடுதலை பெற்றவனுக்கோ, இவற்றின் தொடக்கு விட்டுப் போகிறது. துயரமோ மனக்கசப்போ அவனைத் தொடர்வதில்லை, தொடுவதுமில்லை.

வாய்மை தன்னியல்பில் ஒளிமயமானது. அது இருளில் இருளடைவதில்லை. மறைந்துலவுவதுமில்லை. அது ஒளியூடுருவிச் செல்லத்தக்க பளிங்கு போன்றது. அத்துடன் அதுவே என்றும் நிலைபெற்ற பேரொளியாக ஒரே நிலையில் நின்று இலங்குகிறது. ஆனால் கண்ணொளியற்ற குருட்டுத் தன்முனைப்பு வழிதவறிச் செல்வதுடன் வாய்மை இருக்கும் திசையையும் அறியாது தியங்குகிறது. பகல் தன்னியல்பில் ஒளிமயமாகவே இருந்தாலும் குருடனுக்கு இருள்மயமானதே. அவன் வெளியிடத்தின் ஒளியைக் காணாது வளைவு நெளிவு களைத்தான் மெய்யால் தடவி உணர்வான். வாய்மையொளி காணாதவர் உணரும் உலகும் குருடன் தடவிச் செல்லும் இக்குருட்டு இருள்வழி போன்றது. ஒளியின் நன்மை தீமைகளின் மெய்யுருவங்களை மனிதன் அறிவான். ஆனால் குருடனை நன்மை தீமைகள்தான் தாமாக வந்தடைய வேண்டும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், நன்மைகள் தாமாக வந்தடைவ தில்லை. தீமையே அடையும் என்று கூறத் தேவையில்லை.