உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(236) ||_ _

அப்பாத்துரையம் - 43

வாய்மையே இயற்கையின் நிலைபெற்ற மெய்ம்மை; அதுவே இயற்கையின் அகஇசையமைதி, அதன் முழு நிறைநேர்மை, அதன் இடையறா அன்புத் தாயகம். அது கடல் போன்றது; என்றும் அளவில் கூடுவதுமில்லை. குறைவது மில்லை. அது எவரையும் எதனையும் சார்ந்த தன்று; ஆனால், எல்லாரும் எல்லாமும் அதைச்சார்ந்தே இயங்க வேண்டும். அதை மறைக்கும் ஆற்றல் தன்முனைப்பு ஒன்றுக்குத்தான் உண்டு. தன்முனைப்பின் பலதிறப்பட்ட படைப்புக்களான ஐம்புலஇன்பம், செருக்கு, தருக்கு ஆகியவை அதைப் பலவகையில் நிழலடிக் கின்றன அல்லது இருளடிக்கின்றன.

தன்முனைப் புடையவனிடமிருந்து வாய்மையுடை வனைப் பிரித்துக் காட்டும் முனைப்பான பண்புக்கூறு பணிவிணக்கமே. இது வீம்புத் தற்பெருமை, முரண்டுப் பிடிவாதம், தற்செருக்கு ஆகியவற்றின் எதிரிடைப்பண்பு. வாய்மையுடையவன் தான் கொண்டது வாய்மை எனத் தருக்குவதில்லை. அவன் வாய்மையை நாடுகிறான். நிலையிலாக் கருத்துக்கள் கடந்து நிலையான அதன் வடிவத்தை ஆராய்ந்து தேடுகிறான். தன்முனைப்புடையவனோ, கண்ட கண்ட கருத்துக்களை யெல்லாம் வாய்மைகளாகக் கண்டு, மெய்யான வாய்மையை மட்டிலும் இழந்துவிடுகிறான். வாய்மை யுடையவன் எல்லா மக்களையும் அடிப்படையில் வேற்றுமை யில்லாமல் பார்த்து, எல்லாரிடமும் அடிப்படை வேறுபாடின்றி நேசம் செலுத்தி, அவரவர் பண்படிப் படையாகவும் கருத்தடிப்படையாகவும் வாய்மை யுடையவர்களை வரவேற்கிறான். தன்முனைப் புடையவன் தன் மனங்கொண்ட கருத்தையே நிலையான வாய்மையாகக் கொண்டு, தன் நிழல்களைப் பெருக்கி வாய்மைக் கெதிராக ஒரு தடையரணை வளர்த்துக் கொள்கிறான். ஒருவன் அன்பின் ஒளியில் வாய்மையை எங்கும் காண்கிறான். மற்றவன் தன்னல இன்பநாட்ட மென்னும் இருளிலும் அதன் ஒளிப்படாத இடந் தேடித் தடவுகிறான்.

பெருத்த வாதச் சிக்கல்களில் ஈடுபட்டும் வாத எதிர் வாதப் போரிட்டும் பலர் வாய்மையைப் போராடிப் பெற்று விடவோ, போராடிப் பாதுகாக்கவோ முனைகின்றனர். ஆனால்