உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

(237

இம்முறையில் அவர்கள் பாதுகாப்பது தத்தம் திறத்துள்ள நலங்களையும் தற்கருத்துக்களையுமே யன்றி வேறெதனையு மன்று. வாய்மை நாடுபவன் பாதுகாக்க வேண்டுவது வாய்மையையன்று, தன்னைத்தான் பாதுகாக்க வேண்டும்; அதுவும் தற்கருத்துக்களிலிருந்து, தன்முனைப்பிலிருந்தே தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், வாய்மை நித்தியமானது, எங்கும் நிறைந்தொளி வீசுவது. சாத்தன் கருத்தும் சாத்திகருத்தும், கொற்றன் கருத்தும் கொற்றி கருத்தும் அதை எதுவும் செய்யமாட்டா. அவை வாய்மையை அழிக்க மாட்டா. வாய்மை எய்தப் பெறாது தம்மையே தாம் அழித்துக்கொள்ளும். ஏனெனில் தனிப்பட்ட கருத்துக்களின் தனிமுனைப்புக்களை அழிப்பதாலேயே வாய்மை கைகூடப் பெறும்.

தத்தம் சமயம் அல்லது உட்சமயம் அல்லது கட்சி அல்லது கோட்பாடே நிலைபெற்றதென வாதிடும் சழக்கர் சத்துருவான சத்தியம் அல்லது வாய்மையை உணரமாட்டாத வர்கள் ஆவர். தத்தம் சமயமும் கட்சியுமே சரி என்று பிடிமுரண்டு வாதம் செய்து அதற்கு ஆட்சேர்த்துத் திரிவதால் அவர்கள் போலி வாய்மை அதாவது பொய்மைக்கே உழைப்பவராகின்றனர். ஏனெனில், வாய்மை தங்குதடையற்ற அகல் வெளியில் நிலவும் ஒளி. அது ஒரு சமயம், ஒரு கருத்து ஆகிய சிறு பேழைகளுக்குள் அடைபடுவதன்று. சமயங்களும் கருத்தும் அப்பேரொளியைக் காணும் பலவகைக் கண்ணாடிகளாகத்தான் நிலவ முடியுமேயன்றி, அதை அடைத்துக் காக்கும் பேழையாக அமைய முடியாது. வழிகள் பல. ஆனால் குறிக்கோள் வழிச் செல்பவை எல்லாம் நல்வழிகளே. தவறான வழி ஒரு வழிதான். அது திறந்த வழியுமன்று. அத்துடன் தன்முனைப்பு, கட்டுப்பாடு, குருட்டு நம்பிக்கை ஆகியவற்றில் அடைப்பட்டுக் கிடந்துழலும் நெறியை ஒரு நெறியென்றுகூடக் கூறமுடியாது.ஏனெனில், அது ருதிசை திறந்துள்ள நெறியன்று. ஒரு திசை வாயிலுடைய குருட்டுப் பாதை. அது மறுதிசையில் அடைப்புடைய இடர்ப்பொறியேயாகும். சமய வினை முறைகள், சமயமுடிபுகள் ஆகியவை வாய்மைக்கு வழிமுறைகளாகாத இடத்தில், அடைபட்ட வழிகளே. அதுமட்டுமன்று. அவை வாய்மையருகே செல்லாமலே அடைபட்டு விடுகின்றன. அவற்றின் மயிரிழைச்