(238
அப்பாத்துரையம் – 43
சிக்கல் விளக்கங்கள் முன்னேறிச் செல்லுவதற்கான வழிகாட்டி களல்ல. வளைய வளைய அலையவிடும் அடைப்புப் பாதையின் திருகு முருகுகளே அவை.
நீ வாய்மையின் சேயா, தன்முனைப்பின் அடிமையா என்பதை நீயே உன்னை அகமுகமாக ஆராய்ந்து கண்டுணர்வது எளிது. உன் உள்ளத்தில் ஐயம், பகைமை, பொறாமை, சிற்றின்ப அவாக்கள், தற்பெருமை ஆகிய வற்றுக்கு மிகுதி இடம் ஏற்பட்டுள்ளதா? அவற்றை எதிர்த்து நீ முனைந்து போராடுகிறாயா? உன் உள்ளத்தில் அவற்றுக்கு இடங் கொடுத்தால், அல்லது இடங்கொடுத்து அவற்றுடன் போராட மறுப்பவனானால், நீ தன் முனைப்பின் அடிமை தான். அவற்றுக்கு இடந்தராமலோ, தந்தபின் அவற்றுடன் போராடியோ வருபவனாக நீ இருந்தால், நீ வாய்மையின் சேயாகலாம்.
நீ மட்டிலாத் தன்முரண்டு உடையவனாய், தன் ஆதா யத்தில் மட்டற்ற ஆர்வமுடையவனாகவும் தற்போக்குடையவ னாகவும் தன் காரியக்குட்டியாகவும் இருந்தால், நீ அடிமை. பணிவும் இணக்கமும், மென்மையும் பொதுநல நோக்கம் உடையவனாய், தன்னடக்கத்தில் கருத்துடையவனாய் நீ இருந்தால் மட்டுமே நீ விடுதலை பெற்றவனாக, தனக்குத் தான் தலைவனாகக் கருதப்படத் தக்கவன் ஆவாய்.
நீ பணத்துக்காக, கட்சி, ஆட்சி ஆதிக்கத்துக்காக, தன் புகழ்விருப்பினால் தூண்டப்பட்டு, பகட்டாரவாரத்தை நாடி வாழ்கிறாயா? அப்படியானால் நீ செல்லும் வழி அடிமைகள் ஏறிச்செல்லும் வழிதான். நேர்மாறாக, கடைசிப் படியிலும் மனநிறைவுடையவனாய், உன்னைக் கடந்து செல்பவர் கடந்து செல்லும் போதும் கருத்து உலையாதவனாய், பிறரால் கவனிக்கப்படாமலே வாழ்வதில் வெறுப்பற்றவனாய் இருக்கிறா யானால், நீ அடிமைத் தளைகளுக்கு அப்பாற்பட்டவன் ஆவாய்.
உன் உள்ளத்தில் செருக்கும் இறுமாப்பும் இருக்குமானால், நீ எந்தக் கடவுளை எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்து வழிபட்டு வணங்கினாலும், உன் தன்முனைப்பே உன் தெய்வமாய் அமையும். நேர்மாறாக உள்ளத்தில் பணிவு இருக்குமானால், நீ