திருநிறை ஆற்றல்
239
கடவுளை வணங்காவிட்டாலும் அவர் உன் விருப்பறிந்து நடப்பார். இது உறுதி. ஏனெனில் கடவுள் அத்தகைய உள்ளங்களிலேயே இடையறாது தங்குவார்.
வாய்மை நாடுபவர்களைக் கண்டறிவது எவ்வாறு என்பது பற்றித் தெய்வத் திருப்பாடலில்' திருவளர் கண்ண பெருமான் கூறியது காண்க.
தான்
அஞ்சாமை, ஒருமுக மார்ந்த செஞ் சிந்தனை, நெஞ்சாரும் மெய்யுணர்வு நாடும் நிறையமைதி, தளைநீத்த கையுடன் அவாக்கள் தளைப்படுத்தி வளைத்தடக்கும் ஆற்றல், மருவுறும் நற்பற்று, கலைபயில் நல்லார்வம், கவினார்ந்த மெய்ப்பணிவு, நிலைநிமிர் பேராண்மை, நீடுபல் உயிர்நேயம், வாய்மை, முனியாமை, மாற்றார் நலம்விழையும் தூய்மை, நிறையமைதி, தோலாத நல்லறம், பிறர்குறை காணாப் பெருந்தகைமை, நெஞ்சீரம், பெறுமவற் றுள்ளே நிறைவுபெறும் பீடுள்ளம், பொறுமை, உள்ளுரம், பொறுப்புணர்ச்சி, பண்பிணக்கம், குறுகிய வன்பழி கொள்ளாக் குணநலம், தருக்கும் செருக்கிலாத் தகைமை இவையே
திருக்கிளர் பாரதச் செம்மால், வானகச்
செந்நெறி பதியுறும் சேவடி
மின்னெறி யாளர்க்கு மேவிய பண்பே.
வாய்மை ஒன்று. அதற்கு இட்டுச் செல்லும் வழிகள் ன் பல. ஆனால் தன் முனைப்பின் பாற்பட்ட மனிதர்கள் இதனை மறந்துவிடுகின்றனர். அவர்கள் மெய்யான வாய்மை ஒன்று நீங்கலாக வேறு எத்தனையோ வாய்மைகளை மேற்கொள்கின்றனர்.ஆனால் அத்தகையிடையிலும் அவர்கள் வழி மட்டும் ஒன்றே. அது தத்தம் சமயம் அல்லது சமயக்கிளை அல்லது சமயக்கட்சி அல்லது கோட்பாடே என்று சாதிக்கப் பார்க்கின்றனர். அதுமட்டுமோ? அவர்கள் வாய்மைக்குரிய வழி நேரானது என்று கொள்ளாமல், அது வளைந்து வளைந்து பல கவர்விட்டுச் சிக்கலாயிருப்பது என்றும் கொண்டு, அச்சிக்கல் களுக்குள் சிக்கி அழுந்துகின்றனர்.