அப்பாத்துரையம் - 43
(242) || ___ பதிக்க எண்ணும் அகச்செல்வர் ஆவர். தீமையினின்றும் நன்மைக்கும், நன்மையினின்றும் வாய்மைக்கும் இங்ஙனம் வழி பிறக்கின்றது.
ஆசையின் முறிவினால் ஒருவருக்கு மீண்டும் ஆசையே தான் தோன்றுமானால், அந்தச் செக்குமாட்டுப் போக்கு அவர்களை ஒரே நச்சுச் சூழலில் சுழற்றிச் சுழற்றிப் பேயாட்டமே ஆட்டுவிக்கும். ஆசையின் முறிவிலிருந்து ஆசை முறிப்புக்கு அவர்கள் முயலும் நாளே இந்நச்சுச் சுழலிலிருந்து அவர்கள் முன்னேறும் முதற்படியாகும். ஆசை நிறைவினால் ஆசைபெருகும் போதும் இதே போன்ற எதிர்ச்சுழல் உருவாகிறது. ஆனால் இது பழைய நச்சுச் சுழலில் சிக்கவைத்து அதன் மூலமே நன்மைக்கு வழிகாட்டக்கூடும். இதனாலேயே கீழின்பத்தின் காட்டுப் பாதை துன்பமாகிய நாட்டுப் பாதைக்கும், அத்துன்பப்பாதை உயர் இன்பமாகிய நாடுநகர் அகவழிகளுக்கும் ட்டுச் செல்பவை ஆகின்றன.
தன் பிழையால் இன்னலுறுபவன் தன்னை நொந்து தற்கழிவிரக்கங் கொள்கிறான். மட்டற்ற கழிவிரக்கம் மனக்கசப்பூட்டித் தன்னம்பிக்கையை அழித்து முயற்சியைத் தடுக்கும். ஆனால், இவ்விழிநிலை நீடிக்காது. உயிரின் அகவியல்பே இதனை மாற்றியமைத்துவிடும். பொதுவாகக் கழிவிரக்கம் இன்னலின் படிப்பினைகளில் கருத்துச் செலுத்தி வாழ வழிவகுக்கும். ஆனால் தன் பிழைக்கு வருந்தும் கழிவிரக்கத்தை விடத் தீமைக்குப் பிறர் காரண மெனக் கருதி நையும் நைவு கொடியது. ஏனெனில் இது தன்முனைப்பு அடிப்படையானது.
தன்முனைப்பே உள்ளம் தளைக்கும் தனித்தாழ்; தாழ் அவிழ்க்கும் மெய்திறவு தாங்கி வருந்தெய்வ நன்மகனே வாய்மை; அவன் வருபோழ்தத்தே நாடி அழைக்குமுன் நாடி எதிர்செல்வீர்! சென்மின் அவன் செல்திசை இருள் சாரினும் சீரொளியை நாடிச் சென்றத் திறவெடுத்து, நும்முள்அப் பேரின்ப வாயிலின் தாழ்திறந்து நோக்கரிய பேரொளியை நோக்குவிப்பன் ஆங்கவனே!