உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

[243

உலகு துன்பமயமானதல்ல. ஆயினும் துன்பம் உலகமய மானது. அது புற உலகிலிருந்து தோன்றி அகநோக்கற்ற வர்களின் சூழலில் உலகேயாக மயங்கிக் கிடக்கிறது. அவாக்கள் என்னும் அகக் கோளாறுகள் அதற்கு மாய இன்பப் பூச்சுப் பூசி விடுவதுடன், வாய்மைஒளி அவற்றின்மீது படியாமல் இன்னல்களாகிய கருஞ்சாயலை அதன்மீது படரவிடுகிறது. துன்பத்தை நீக்கி இன்பத்தை நாட விரும்பும் அவாக்களின் அடிமைகளை இவ்விருவகை மாறாட்டத் திரைகளும் ஏய்த்து, இன்பத்தை விட்டுத் துன்பத்தை அணைக்க வைக்கின்றன. புறத்துன்பத்தைக் கண்டு அஞ்சுபவர்கள். சிந்தனையற்றவர்கள், இக்குழியில் விழுந்து குலைவுறுகின்றனர்.

நீ துன்பத்துக்காளாய், போதிய அளவு துன்பத்தின் இயல்பை அறிந்து கொண்டாயா? துயரமென்னும் ஆழ்கயத்தில் நீ முக்குளித்து அதன் அடித்தலந் தடவி யிருக்கிறாயா? அப்படியானால் நீ தன்முனைப்பை எதிர்த்துப் போரிடத் தயங்கமாட்டாய். ஏனென்றால் துன்பத்தின் படிப்பினை அதுவே.

மெய்யறிவு பெறத் தன்முனைப்பை விடுவது இன்றி யமையாதது என்பதை உணராத “அறிவாளிகள்” உண்டு. அவர்கள் அறிவுக் கோட்பாடுகள் என்னும் சிக்கல் மிக்க சுழல்நெறிகளில் கறங்கிச் சுழல்வர். கறங்கும் அவர்கள் பார்வையில் எதுவும் தெளிவான காட்சியறிவை நல்காது. வாய்மை என்பது சிக்கல் மிக்க ஒன்று என்று அவர்கள் கொண்டு மேலும் மேலும் தங்கள் கருத்துக்களைச் சிக்கலாக்கிக் கொண்டு உழலுவர். வாய்மை அவர்கள் கருதுவதற்கு நேர்மாறானது. அது எளிமை வாய்ந்தது, நேரானது. அது சிக்கல் வளர்ப்பதல்ல சிக்கல்களறுப்பது. அது முரண்பாடு வளர்ப்பதல்ல; முரண்பாடகற்றி இணக்கம் பெருக்குவது.

ரு

இருதலைக்குறிக்கோளிடையே, இரு கடமைகளிடையே நெறிகாணாமல் தயங்கவிடுவதல்ல! வாய்மை ஒரே குறிக் கோளை, ஒரே கடமையை நோக்கி அது மனிதனை இட்டுச் செல்வதாகும். ஏனெனில் அது பொதுநலத்தின் நண்பன், தன்னலத்தின் நண்பனன்று. தன்னலம் தன்னலத்தை வளர்த்தாலும், தன்னலத்துடன் தன்னலம் முரணுவதை அது தடுக்காது.